இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி..!! அதிமுகவின் முக்கியப் புள்ளியை தட்டித் தூக்கிய தவெக..!!

9c8e05bdf9a36ecb2bea5ba6ea636ee1 1

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலூர் மண்டலத்தில் அதிமுகவுக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியும், வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான வாசு, திடீரென நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2006 முதல் 2010 வரை மாவட்ட செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக களம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் நிழலாகவும், வேலூர் மண்டல அதிமுகவின் முக்கிய தூணாகவும் செயல்பட்டு வந்த வாசுவின் இந்த முடிவு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஒரு எதிர்பாராத பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடி நகர்வுகளை தொடர்ந்து, தற்போது வாசுவும் அதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அதிமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்த அதிருப்தியே இந்த வெளியேற்றத்திற்கு காரணம் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய கட்சியாக உருவெடுத்து வரும் வேளையில், வாசு போன்ற அனுபவம் வாய்ந்த களப்பணியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அதில் இணைவது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. குறிப்பாக, வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியில் இது ஒரு சிறு விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

Read More : உங்கள் கனவில் பணத்தையும் தங்கத்தையும் கண்டால், நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கும் தெரியுமா?

CHELLA

Next Post

வெற்றி தரும் சகுனங்கள்..!! சவ ஊர்வலத்தை பார்த்துச் சென்றால் அதிர்ஷ்டமா..? சுப காரியத்திற்கு செல்லும்போது கவனிக்க வேண்டியவை..!!

Sat Jan 17 , 2026
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்ட இந்த நவீன யுகத்திலும், நம் முன்னோர்கள் வகுத்து வைத்த ‘சகுன சாஸ்திரங்கள்’ மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறையவே இல்லை. ஒரு முக்கியமான பணிக்காகவோ, நீண்ட தூரப் பயணத்திற்காகவோ வீட்டை விட்டுப் புறப்படும்போது, எதிர்கொள்ளும் சில நிகழ்வுகள் அந்த வேலையின் வெற்றியைத் தீர்மானிப்பதாக காலம் காலமாக நம்பப்படுகிறது. அறிவியல் ரீதியான தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு, ஆன்மீக ரீதியாகவும் மனோரீதியாகவும் ஒரு வேலையைத் தொடங்கும் […]
Death 2026

You May Like