வங்கதேசத்தில் அடுத்த ஷாக்; கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து நபர் படுகாயம்..!

bangladesh 3

வங்கதேசத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 31 அன்று ஷரியத்பூர் மாவட்டத்தில் 50 வயதான கோகன் தாஸ் என்பவர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோகன் தாஸ் மீது நடந்த தாக்குதல்

கோகன் தாஸ் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கும்பலால் அடித்து உதைக்கப்பட்டுள்ளார்.. பின்னர் அவர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் படு காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த இரண்டு வாரங்களில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதலாக பதிவாகியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் நடந்த முக்கிய சம்பவங்கள்

டிசம்பர் 24 – கலிமோஹர் யூனியன், ஹொசைன்தங்கா பகுதியில் 29 வயதான அம்ரித் மொண்டல் என்பவர் கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டார். டிசம்பர் 18 – மைமன்சிங் மாவட்டம், பலுகா உபஜிலாவில் 25 வயதான தீபு சந்திர தாஸ் என்பவர் பொய்யான மத அவமதிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் கும்பலால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் மரத்தில் தொங்கவிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை – உலகம் முழுவதும் எதிர்ப்பு

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் காலகட்டத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவின் கவலை

கடந்த வாரம் இந்திய அரசு வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர்
மீது தொடர்ச்சியான பகைமை நிலவுவதாக கடும் கவலை தெரிவித்தது. அந்நாட்டு நிலவரங்களை நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் இந்தியா கூறியது.

வங்கதேச அரசின் மறுப்பு

இந்தியாவின் குற்றச்சாட்டுகளை வங்கதேச வெளிவிவகார அமைச்சகம் மறுத்தது. அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தனி குற்றச் சம்பவங்களை திட்டமிட்ட இந்து ஒடுக்குமுறையாக சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது.. இந்தியா முழுவதும் வங்கதேசம் மீது வெறுப்பு உணர்வை உருவாக்க சிலர் முயல்கிறார்கள்.. சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டு தவறாக பிரசாரம் செய்யப்படுகின்றன” என தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் கடும் விமர்சனம்

பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா, யூனுஸ் அரசை கடுமையாக விமர்சித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ மத சிறுபான்மையினரை பாதுகாக்க யூனுஸ் அரசு தோல்வியடைந்துள்ளது.. தீவிரவாதிகள் வெளிநாட்டு கொள்கையையே கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.. இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களே இன்று அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். தண்டனை பெற்ற தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.. இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கவலை நியாயமானது” என்றும் அவர் கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

டிசம்பர் 31 அன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா சியாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்று, அவரது மகனும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவருமான தாரிக் ரஹ்மான் அவர்களை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினார்.

யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றதிலிருந்து இந்தியா –வங்கதேச உறவுகள் பதற்றமாக உள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் மேற்கொண்ட 4 மணி நேர தாகா பயணம் நடைபெற்றது.

Read More : 40 பேர் பலி; புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர தீ விபத்து.. ஸ்விட்சர்லாந்தில் பெரும் சோகம்.!

RUPA

Next Post

அசுத்தமான நீரால் 6 மாதக் குழந்தை பலியான சோகம்; 10 வருடப் பிரார்த்தனைக்கு பின் பிறந்த குழந்தை என தாய் கண்ணீர் மல்க பேட்டி..!

Thu Jan 1 , 2026
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான நீரால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.. அங்கு 6 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இந்த மரணம் உள்ளூர் மக்களிடையே கோபத்தையும் போராட்டங்களையும் தூண்டியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் உள்ள மராத்தி மொஹல்லாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தையின் தாய் சாதனா சாஹு, வீட்டு விநியோகக் குழாய் நீரில் கலக்கப்பட்ட பாலைக் குடித்த பிறகு, குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு […]
indore child 1

You May Like