கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் மற்றொரு சோக சம்பவம்..!! தொடரும் தவறான சிகிச்சை..!!

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில், கரூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா (17). இவர், கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை தொடர்ந்து கொளத்தூர் பெரியார் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் வலது மூட்டு பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்ச்சி இழந்ததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் மற்றொரு சோக சம்பவம்..!! தொடரும் தவறான சிகிச்சை..!!

அங்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், அவரது கால் வீங்கியிருந்தது. எனவே உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரின் வலது காலை அகற்றினர். பின்னர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியாவின் உடல்நிலை மோசமான நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் மற்றொரு சோக சம்பவம்..!! தொடரும் தவறான சிகிச்சை..!!

பிரியா உயிரிழந்த சோகம் இன்னும் மறைவதற்குள் கரூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கரூரில் ஆசிரியை தவறான சிகிச்சையால் காலை இழந்த சோகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கரூரை சேர்ந்த ஷீலா, கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதில் நடைபெற்ற தவறான சிகிச்சை காரணமாக கால் நிறம் மாறிப்போய் அகற்றப்பட்டது. தற்போது அவர் தமிழக அரசிடம் நீதி கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

CHELLA

Next Post

’அட இது நல்லா இருக்கே’..! இனி Cab கட்டணத்தை நீங்களே முடிவு செய்யலாம்..!! எப்படி தெரியுமா..?

Thu Nov 17 , 2022
இந்தியாவில் கேப் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் ஊபர், ஓலா மற்றும் ரேபிடோ போன்ற நிறுவனங்கள் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களே சொந்தமாக கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் வகையிலான சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த inDriver என்ற நிறுவனம் சென்னையில் வழங்க இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி மூலம் தெரியவந்துள்ளது. டிராஃபிக் அதிகமாக இருக்கும் சமயத்திலோ அல்லது மழை நேரத்திலோ எந்த கட்டணமும் இதன் மூலம் […]
’அட இது நல்லா இருக்கே’..! இனி Cab கட்டணத்தை நீங்களே முடிவு செய்யலாம்..!! எப்படி தெரியுமா..?

You May Like