தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..
திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. ஆட்சியில் பங்கு என்று மிகப்பெரிய அஸ்திரத்தை விஜய் வீசிய போதிலும் தவெக உடனும் இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை..
தவெகவை பயன்படுத்தி சீட் பேரத்தை அதிகப்படுத்திய காங்கிரஸ், திமுக உடன் கூட்டணியை இறுதி செய்துவிட்டது.. இந்த சூழலில் என்.டி.ஏ கூட்டணியில் தவெகவை இழுக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.. முதலில் 45 தொகுதிகள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 51 சீட் வரை ஒதுக்க பாஜக முன் வந்துள்ளது.. மேலும் விஜய்க்கு துணை முதல்வர் பதவியை கொடுக்க பாஜக முன்வந்துள்ளது..
எனினும் என்.டி.ஏ கூட்டணியில் இணையலாம் என்று ஒருதரப்பு, கூட்டணி வைத்தால் விஜய்யின் தனித்தன்மையை பாதிக்கும் என்று மற்றொரு தரப்பும் கூறுகிறது.. எனினும் இந்த இரட்டை நிலைப்பாட்டால் விஜய் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறார்
இதுபோதாதென்று தவெகவிற்குள் மற்றொரு குழப்பமும் நிலவுகிறதாம்.. அதாவது கட்சிக்குள் ஜான் ஆரோக்கியராஜ், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் என பல அதிகார மையங்கள் உள்ளது.. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி வேட்பாளர் பட்டியலை விஜய்யிடம் கொடுத்துள்ளனராம்.
மேலும் ஒரு தரப்பினர் குறித்து மற்றொரு தரப்பினர் பரஸ்பரம் புகார் தெரிவித்து வருகிறார்கள்.. இதனால் கள நிலவரம் புரியாமல், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் விஜய்க்கு பெரும் குழப்பம் உள்ளதாம்..
மேலும் வேட்பாளர் சீட் தொடர்பாக சில முக்கிய புள்ளிகள் கோடிக்கணக்கில் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதனால் ரசிகர் மன்ற காலத்தில் இருந்து உழைத்த தொண்டர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, பணம் கொடுத்தால் தான் சீட் என்ற நிலை உருவாகி உள்ளது.. தங்களுக்கு வேண்டியவர்களுக்கா மொத்தமாக தொகுதிகளை சிலர் புக் செய்து வருகிறார்களாம்..
தற்போதைய சூழலில் சுமார் 150 தொகுதிகளுக்கு மட்டுமே ஓரளவு செல்வாக்குள்ள வேட்பாளர்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.. மீதம் இருக்கும் தொகுதிகளை கடைசி நேரத்தில் கூட்டணிக்கு வரும் கட்சிகளிடம் தள்ளிவிடலாம் என்ற பலவீனமான நம்பிக்கையில் தான் தவெகவின் தேர்தல் வியூகம் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
Read More : ரஜினியை பற்றி தவறாக பேசிய ஆதவை விஜய் கண்டிக்கனும்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கணும்.. நயினார் காட்டம்..!



