விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு தேசிய வங்கி (NABARD)யில் 44 இளம் வல்லுநர்கள் (Young Professionals) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக NABARD அறிவித்துள்ளது.
பணியிட விவரம்:
காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மை – 3
பொருளாதாரம் – 3
தரவு அறிவியல் – 4
சைபர் பாதுகாப்பு – 1
கல்வி நிர்வாகம் – 2
கிராப்பிக் டிசைன் – 1
பிஆர் – 2
தகவல் தொழில்நுட்பம் – 12
புவித் தகவலியல் – 1
மேம்பாட்டு மேனேஜ்மெண்ட் – 3
திட்ட கண்காணிப்பு – 4
நிதி – 6
UI/UX டிசைன் – 1
மென்பொருள் தேர்வு – 1
மொத்தம் – 44
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் 01.11.2009 முன்னரும், 01.11.2004 பின்னரும் பிறந்திருக்கக்கூடாது.
கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவிற்கு ஏற்ப இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், துறை சார்ந்த 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: இளம் வல்லுநர்களாக தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். கல்வி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.01.2026



