மத்திய அரசின் கீழ் செயல்படும் எச்.பி.சி.எல்., ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு ( Hindustan Petroleum Recruitment 2025 ) அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவின் கீழ் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பணியிட விபரம்:
- இன்ஜினியர் – 50
- சீனியர் மேனேஜர் – 28
- சீனியர் இன்ஜினியர் – 18
- அசிஸ்டென்ட் இன்ஜினியர் – 14
- ஜூனியர் எக்சிகியூட்டிவ் – 8
- அசிஸ்டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் – 4
- மொத்தம் – 131 பணியிடங்கள்
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ., படித்திருந்தால் போதும்.
வயது வரம்பு: பல்வேறு பிரிவுகளில் கீழ் உள்ள ஜூனியர் நிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 25 வயதைக் கடந்திருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.
தேர்வு முறை: பதவிக்கு ஏற்ப ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பொதுப்பிரிவினருக்கு ரூ. 1180 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 10.8.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு hrrl.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Read more: அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜயபாஸ்கர் முதலமைச்சர் ஆகலாம்..!! – இபிஎஸ் பரபரப்பு பேச்சு