கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான டிஆர்பி அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் டிஆர்பி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிட விவரம்: டிஆர்பி 2025-ல் மொத்தம் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இவை 48 பாடப்பிரிவுகளில் உள்ளன.
- உயிர் தொழில்நுட்பம் – 5
- உயிர் வேதியியல் – 21
- தாவரவியல் – 96
- தாவர உயிரியல் மற்றும் தாவர உயிர் தொழில்நுட்பம் – 28
- உயிரியல் அறிவியல் கல்வி – 1
- தொழில் நிர்வாகம் – 5
- வேதியியல் – 195
- கணினி அறிவியல் – 188
- கணினி பயன்பாடு – 69
- ஃபேஷன் தொழில்நுட்பம் – 1
- வணிகவியல் – 165
- வணிகவியல் (கணினி பயன்பாடு) – 12
- வணிகவியல் (இ-காமர்ஸ்) – 3
- வணிகவியல் (சர்வதேச தொழில்) – 17
- வணிகவியல் (கோ-அப்ரேஷன்) – 12
- வணிகவியல் (சிஎஸ்) – 28
- பாதுகாப்பு ஆய்வுகள் – 8
- பொருளாதாரம் – 110
- ஆங்கிலம் – 424
- எலெக்ட்ரானிக்ஸ் – 17
- எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் – 5
- சுற்றுச்சூழல் அறிவியல் – 1
- கல்வி – 43
- உணவு மற்றும் ஊட்டச்சத்து – 8
- உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து – 4
- உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவுமுறை – 6
- ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை – 23
- வீட்டு அறிவியல் – 31
- இந்தி – 4
- வரலாறு – 72
- வரலாற்று ஆய்வுகள் – 4
- மனித உரிமை – 2
- எச்ஆர்டி – 1
- வரலாறு கல்வி – 1
- புவியியல் (ஜியோகிராப்பி) – 72
- புவியியல் (ஜியோலாஜி) – 20
- தகவல் தொழில்நுட்பம் – 10
- இந்தியன் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா – 3
- இந்திய இசை – 2
- இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் – 7
- கணிதம் – 212
- கடல் உயிரியல் – 2
- மைக்யோபயோலஜி – 25
- கணித கல்வி – 4
- மலையாளம் – 1
- இயற்பியல் – 158
- அரசியல் அறிவியல் – 28
- உளவியல் – 13
- பொது நிர்வாகம் – 5
- உடற்கல்வி அறிவியல் – 4
- சமஸ்கிருதம் – 5
- வணிகவியல் – 58
- சமூகப் பணி – 15
- சமூகவியல் – 3
- தமிழ் – 310
- தெலுங்கு – 2
- சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை – 10
- காட்சி தொடர்பியல் – 21
- உருது – 3
- வனவிலங்கு உயிரியல் – 5
- விலங்கியல் – 100
- மொத்தம் – 2,708
தேர்வு செய்யப்படும் முறை:
மொத்த மதிப்பெண்கள்
- எழுத்துத் தேர்வு + நேர்காணல் மதிப்பெண்கள் ஒன்றிணைக்கப்படும்.
- மொத்த மதிப்பெண்கள்: 250 (எழுத்துத் தேர்வு) + 30 (நேர்காணல்) = 280
தேர்வு முடிவு
- மாணவர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், மொத்த மதிப்பெண்களின் வரிசைப்படி தெரிவு செய்யப்படுவர்.
சான்றிதழ் சரிபார்ப்பு
- தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்கள் கல்வித் தகுதிகள், அனுபவ சான்றிதழ்கள் மற்றும் அடிப்படை ஆவணங்களை சரிபார்க்க வைக்கப்படுவர்.
பணியிடம் நிரப்புதல்
- சான்றிதழ் சரிபார்ப்பு வெற்றியளித்த பின் பணியிடங்கள் அதிகாரப்பூர்வமாக நிரப்பப்படும்.



