எல்லோரும் தங்கள் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் வயது அதிகரிப்பு, மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மாசுபாடு காரணமாக, சருமம் காலத்திற்கு முன்பே வயதானதாகத் தோன்றத் தொடங்குகிறது.
ஆனால், கொரியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாட்டுப் பெண்கள் தங்கள் அழகைப் பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்துவார்கள். இதற்காக அவர்கள் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் ஒரு பாரம்பரிய அழகு இரகசியம் தான் ஜாவானீஸ் லூலூர் (Javanese Lulur). இது சில குறிப்பிட்ட மூலிகைகள் மற்றும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு குளியல் பொடியாகும். இதைத் தினமும் பயன்படுத்துவதன் மூலம் சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாறும்.
இந்த லுலூரில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பொருள் அரிசி மாவு. அரிசி மாவு ஒரு சிறந்த இயற்கையான ஸ்க்ரப் ஆகும். இது சருமத்தை மென்மையாக்கி, பளபளப்பை அதிகரிக்கிறது. ஒரு கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்க்கப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் சருமத்திற்குப் பல நன்மைகளை அளிக்கும். இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்க்கப்படுகிறது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக்கும்.
எப்படிப் பயன்படுத்துவது? இந்த கலவையை உடல் முழுவதும் தடவி, சுமார் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பின்னர், தண்ணீரைத் தொட்டு மெதுவாக மசாஜ் செய்து, அலச வேண்டும். இதைச் செய்த பிறகு உங்கள் சருமம் மிகவும் புத்துணர்ச்சியுடனும், பொலிவுடனும் இருக்கும்.
Readmore: 2011 உலகக் கோப்பை!. தோனி சிக்ஸர் அடித்த பேட்டின் விலை எவ்வளவு தெரியுமா?. இத்தனை லட்சமா?.



