10வது தேர்ச்சி போதும்.. தெற்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி.. 3,518 பணியிடங்கள்..! மிஸ் பண்ணிடாதீங்க..

railway 2025

தெற்கு ரயில்வே பணிமனைகளில், ஓராண்டு காலம் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விதிகளின் அடிப்படையில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.


காலிப்பணியிட விவரம்: தெற்கு ரயில்வேயில் மொத்தம் 3,518 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:

  • பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் (Chennai) – 1,394 இடங்கள்
  • திருச்சி கோல்டன் ராக் மத்திய பணிமனை – 857 இடங்கள்
  • போத்தனூர் சிக்னல் மற்றும் டெலிகாம் பணிமனை (Coimbatore) – 1,267 இடங்கள்

வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு அல்லது ITI துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? www.sr.indianrailways.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, அரசு நிர்ணயித்துள்ள ஊதிய விதிகளின் அடிப்படையில் உதவித்தொகையுடன் ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.100 (ஆன்லைன் வழி).
SC, ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 25, 2025.

Read more: ரெடிமேட் ஆடை உற்பத்தி ஆலை..!! ரூ.3 லட்சம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?

English Summary

Apprenticeship training in Southern Railway.. 3,518 vacancies.. 10th class, ITI qualification;

Next Post

7,000 ஆடம்பர கார்கள்.. தங்க பிரைவேட் ஜெட்.. உலகின் பணக்கார மன்னரின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா?

Mon Aug 25 , 2025
கார் ஆர்வலர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த கார்களை சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, பென்ட்லி, போர்ஷே மற்றும் லம்போர்கினி கார்களை வைத்திருந்தாலே அவர் நிச்சயம் பெரும்பணக்காரராக தான் இருப்பார்.. ஆனால் இவர் நூற்றுக்கணக்கான ஆடம்பர வாகனங்களை சேகரித்து வைத்திருக்கிறார்.. அவர் வேறு யாருமில்லை புருனே மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா தான்.. உலகின் பணக்கார மன்னராக கருதப்படும் இவரின் கார் சேகரிப்பு அனைவரையும் வியப்பை ஏற்படுத்துகிறது.. […]
sultan 1

You May Like