பல்லிகளும், கரப்பான் பூச்சிகளும் வீட்டில் நோய் பரப்பக்கூடிய முக்கிய காரணிகளாக உள்ளன. அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கு இவை கூட காரணமாக இருக்கலாம். எனவே, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கையான வழிகளில் இந்த உயிரினங்களை வீட்டில் இருந்து விரட்டுவதற்கான சில குறிப்புகளை இங்கு காணலாம்
* 5 முதல் 6 கற்பூரக் கட்டிகளைப் பொடியாக்கி, தண்ணீரில் கலக்கவும். அதனுடன் கிராம்பு எண்ணெயைச் சேர்த்துத் துடைத்தால், அவற்றின் கடுமையான வாசனை பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்டிவிடும்.
* வெங்காயம் மற்றும் பூண்டு சாற்றை தண்ணீரில் கலந்து, அதை வீட்டின் மூலைகளிலும், நுழைவாயில்களிலும் தெளிக்கலாம். இதன் கடுமையான வாசனை பூச்சிகளை அண்ட விடாது.
* துடைக்கும் தண்ணீரில் 4 முதல் 5 ஸ்பூன் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து பயன்படுத்தலாம். இந்தத் தண்ணீரைத் தரை மட்டுமின்றி, சுவர்கள் மற்றும் மேசைகள் மீதும் தெளிக்கலாம். இது மூலைகளில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவும்.
* ஒரு வாளி தண்ணீரில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவைக் கலந்து துடைத்தால், இந்த கலவையின் வாசனை பூச்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் அவை தாங்களாகவே வீட்டை விட்டு வெளியேறும்.
* காபி மற்றும் புகையிலைத் தூளைக் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் வைக்கலாம். இதை உண்டால் பல்லிக்கு விஷமாக மாறும். எனவே, செல்லப்பிராணிகள் உள்ள வீடுகளில் இதைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.
* பிரிஞ்சு இலைகளின் வாசனையை கரப்பான் பூச்சிகள் விரும்புவதில்லை. காய்ந்த இலைகளை நசுக்கி, அவை நடமாடும் அலமாரிகள் மற்றும் பிற இடங்களில் தெளித்தால், அங்கிருந்து ஓடிவிடும்.