உடல் தோற்றத்தை கெடுக்கும் வகையில் உள்ள, வயிற்றிலும் இடுப்பிலும் தொங்கும் சதைகளை பழங்கள் காய்கறிகளை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சரிசெய்யலாம்.
முறையற்ற உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண், பெண் என இருபாலருக்கும் அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் அதிகளவில் கொழுப்புகள் தேங்கி சதைகள் தொங்கும் நிலை ஏற்படுகிறது. பொதுவாக கர்ப்ப காலத்திற்கு பிறகு பெண்களின் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்று தான் உடல் எடை கூடுதல். பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை மிக விரைவிலேயே அதிகரித்து விடும். அதே போன்று பிரவத்திற்கு பிறகும் இந்த எடை கூடுதல் பிரச்சனை தொடர கூடும். குறிப்பாக வயிற்று பகுதியில் அதிக கொழுப்புகள் சேர்ந்தது போன்று உப்பசமாக இருக்கும். தொங்கும் சதைகளை குறைப்பதற்காக உடற்பயிற்சிகளும் எடுத்துவருகின்றனர். இத்துடன் இயற்கையாக காய்கறிகள் பழங்கள் மற்றும் சமையலறையில் பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டும் சதைகளை சரிசெய்யலாம். இதனை குறைக்கும் எளிய வழிகள் குறித்து பார்க்கலாம்.
சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
அதிக அளவு புரதம் உள்ள கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நெடுநேரம் பசியிருக்காது. இது தொப்பையை குறைக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். இது கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இதனை சாப்பிட்டால் வயிறு திருப்தியாக இருக்கும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துள்ளதால் கொழுப்பை கரைக்க இது உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டுமானால் முதலில் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு அதிக அளவு நார்ச்சத்து உள்ள சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
அவகேடோ பழத்தில் கெட்ட கொழுப்பை எரிக்கும் ஆற்றல் மிகவும் அதிகம். இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உயிரணு சவ்வுகளை உறிஞ்சி, செல்கள் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களுடன் சேர்ந்து சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது உடலின் கொழுப்பை சேமிக்கும் ஹார்மோன்களையும் கட்டுப்படுத்துகிறது.
தேங்காய் எண்ணெயில் நம்முடைய உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் தான் இருக்கின்றன. அவை உடலுக்கு நன்மை செய்வன. உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாகவும் இருக்கும். அனைத்து உணவு கொழுப்புகளும் சமமாக உருவாக்கப்படுவதில்லை. தேங்காய் எண்ணெயில் ட்ரைகிளிசரைடுகள் (எம்.சி.டி) நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை வழங்குவதோடு, அவை உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன.
இந்த belly fat குறைப்பதற்கு சிறந்த ஒன்றாக வெந்தயம் பயன்படுகிறது. அதிக குளிர்ச்சி தன்மையுடைய வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து, குடித்து வந்தோம் என்றால் ஒரே வாரத்தில் 2 அல்லது 3 கிலோ வரை தொப்பை குறைய (belly fat) உதவுகிறது. மேலும், தொப்பை குறைய(weight loss) வெந்தய டீ மிகவும் நல்லது. செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும், பின்பு அவற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும். இந்த நீரை தினமும் ஒரு டம்ளர் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் சேரும் தேவையற்ற தொப்பை குறைய (belly fat) வழிவகுகின்றது.