#Flash : தூய்மை பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? தமிழ்நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது.. விஜய் அட்டாக்..

Vijay Stalin

தவெக தலைவரும் நடிகருமான விஜய் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது..


இதையடுத்து காவல்துறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.. இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தனர்.. ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் நேற்று நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை கைது செய்தனர்.. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

தவெக தலைவரும் நடிகருமான விஜய் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்! குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?

அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்? அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்..

RUPA

Next Post

நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. 3 நாட்களாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Thu Aug 14 , 2025
Gold prices in Chennai remained unchanged today, with a sovereign being sold for Rs. 74,320.
gettyimages 1157433618 640x640 1

You May Like