சாமி கும்பிடும் போது இந்த அறிகுறிகள் இருக்கா..? உங்கள் வேண்டுகோளை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம்..

prayer cry

கோயில்களில் வழிபாட்டின்போது சிலருக்கு திடீரென கண்ணீர் வருவதையும், கொட்டாவி ஏற்படுவதையும், சில சமயங்களில் சாமி சிலையிலிருந்து பூ விழுவது, மணியோசை கேட்பது போன்ற அனுபவங்கள் நிகழ்வதையும் பலர் பார்த்திருப்பார்கள். இவையெல்லாம் சாதாரணமான நிகழ்வுகளா, இல்லை அதற்கு ஏதேனும் ஆன்மிக அர்த்தம் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது.


பொதுவாக, கோயிலுக்குச் செல்வதன் முக்கிய நோக்கம், மனதில் இருக்கும் குறைகளை கடவுளிடம் சொல்லுவதும், வேண்டுதல்கள் நிறைவேறினால் பரிகாரம் செய்வதுமே. இன்னும் சிலர் மனஅமைதி தேடி கோயில்களுக்குச் செல்கிறார்கள். அத்தகைய தருணங்களில், இறைவனை மனமுருக வழிபடும் போது சிலரது கண்களில் இருந்து தன்னிச்சையாக கண்ணீர் வழிந்தோடுகிறது.

ஆன்மிக நம்பிக்கைகளின்படி, இது இறைவனுக்கும் பக்தருக்கும் இடையிலான ஆழமான, உன்னதமான தொடர்பின் வெளிப்பாடு என கூறப்படுகிறது. தன்னை மீறிய ஒரு சக்தி தன்னுள் செயல்படுவதை உணரும் போது, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாமல், கண்ணீராக வெளிப்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இது அனுபவிக்க மட்டுமே இயலும்; அறிவியல் ரீதியாக விவரிக்க முடியாத உணர்வு எனவும் கூறப்படுகிறது.

மனசோர்வு, மன உளைச்சல், அமைதியற்ற நிலை ஆகிய நேரங்களில், மனிதன் அதிகமாக கடவுளை நினைக்க ஆரம்பிக்கிறான். அந்த மனநிலையில் இறைவனை வேண்டும்போது, உள்ளத்தில் தேங்கியிருந்த வேதனை அல்லது பாரம் வெளியேறும் வடிவமாகவும் கண்ணீர் வருகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், ஆன்மிக விளக்கங்களின்படி, நீங்கள் விரும்பி வழிபடும் கடவுளின் முன் தன்னிச்சையாக கண்ணீர் வந்தால், கடவுள் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். உங்கள் பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது

என்ற அடையாளமாக அதனை பார்க்கலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அதோடு, கண்ணீர் மூலம் கடவுள் உங்களுக்கு ஒரு குறிப்பை வழங்குகிறார் என்றும் நம்பப்படுகிறது. அந்தக் குறிப்பை மனதார உணர்ந்து, வாழ்க்கையில் புரிந்து கொண்டு செயல்பட்டால், தற்போது உள்ள பிரச்சனைகள் படிப்படியாக தீரும் என்றும் ஆன்மிக நம்பிக்கை உள்ளது.

Read more: பற்றி எரியும் விஐடி பல்கலைக்கழகம்.. கலவரத்தில் ஈடுபட்ட 4,000 மாணவர்கள்.. பெரும் பதற்றம்!

English Summary

Are there any of these signs when you bow to the Lord? It means that God has accepted your request.

Next Post

ஆண்ட்ராய்டு போன்களில் மிகப்பெரிய அச்சுறுத்தல்..! வங்கி செயலிகளை குறி வைக்கும் ஆபத்தான தீம்பொருள்..!

Wed Nov 26 , 2025
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி.. ஆம்.. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது. சைபர் பாதுகாப்பு அறிக்கைகளின்படி, புதிய ஆண்ட்ராய்டு வங்கி செயலிகளை விரைவாக குறிவைத்து பயனர்களின் உள்நுழைவு விவரங்களைத் திருடும் திறன் கொண்டது. மேலும், இந்த தீம்பொருள் எந்த குறியாக்க குறியீட்டையும் உடைக்காமல் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட அரட்டைகளையும் கைப்பற்றி படிக்க முடியும். தற்போது, […]
AA1HK0Gc

You May Like