மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் காலை நேரங்களில் படுக்கையை விட்டு எழுவது சவாலாகவே இருக்கிறது. வெளியில் இருந்து வரும் குளிர் காற்று, அதோடு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டிய நிலை என்றால், அதை நினைத்தாலே சிலருக்கு சிலிர்க்கும்.
இந்நிலையில், பலரும் வெந்நீரில் குளிப்பதை ஒரு வசதிக்கேற்ப செய்த செயலாகவே பார்க்கின்றனர். ஆனால், உண்மையில் இது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பல நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அதே நேரத்தில், சில பக்கவிளைவுகளும் உண்டு. அவற்றைப் பற்றியும் அறிந்துகொள்வது அவசியம்.
தினசரி வேலைப்பளு, நேரப் பற்றாக்குறை, வாழ்க்கை ஓட்டத்தில் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவை வெந்நீர் குளியல் ஒரு சிறந்த மாற்று தீர்வாக இருக்கிறது. வெதுவெதுப்பான நீர், உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது நரம்பு மண்டலத்தை சீர்படுத்தி, மனதிற்கு ஒரு அமைதியான உணர்வை தருகிறது.
அதற்கு மேல், யூகலிப்டஸ் அல்லது துளசி எண்ணெய்களை நீரில் சேர்த்தால், அதன் வாசனை மூலமாகவே மன அழுத்தம் குறைந்து, புத்துணர்ச்சி ஏற்படுகிறது. இதுவே அரோமா தெரப்பியின் ஒரு வகை என்று கூறலாம்.
அதேபோல், தூங்கும் முன் மொபைலில் ஸ்க்ரோல் செய்யும் பழக்கத்தை விட, தூக்கத்திற்கு முன் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிறிய குளியல் எடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். National Library of Medicine வெளியிட்ட 2019 ஆய்வில், படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் வெந்நீரில் குளிப்பது தூக்கத்திற்கு உதவுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. இது உடல் வெப்பத்தைக் குறைத்து, மெதுவாக தூக்க நிலைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
வெந்நீர் குளியல் சருமத்தின் மென்மையை பாதுகாக்க உதவுகிறது. வீக்கம் குறையும், இரத்த ஓட்டம் மேம்படும். ஆனால், உஷ்ணம் அதிகமாக இருப்பது சருமத்திற்கு ஹானிக்கரமாக மாறும். அதிக வெப்பம், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, அதைப் பாலைவனமாக மாற்றும் வாய்ப்பு உண்டு. எனவே, எப்போதும் வெதுவெதுப்பான, பொறுத்தமான வெப்பநிலையில் நீரை தேர்வு செய்வது முக்கியம்.
காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சளி, இருமல், மூக்கடைப்பு போன்றவற்றுக்கு வெந்நீர் குளியல் ஒரு வீட்டுக்குள் உள்ள ஹோமியோ தடைப்புகோலாக இருக்கிறது. இதன் நீராவி மூக்குக்குழாய்களை திறப்பதுடன், மூளைக்குள்ளும் ஒரு இலகுவான உணர்வை உருவாக்குகிறது. மாயோ கிளினிக்கின் ஆய்வுகளின்படி, வெந்நீர் குளியல் மூட்டுவலி மற்றும் தலைவலி போன்றவற்றுக்கும் ஓரளவு நிவாரணம் தரக்கூடியதாக இருக்கிறது.
ஒரு நீண்ட நாளின் பின்புலத்தில் வெதுவெதுப்பான நீரில் சில நிமிடங்கள் செலவிடுவது, ஒருவித புனர்உயிர் கொடுப்பது போல. இது அன்றாட மன அழுத்தம், உடல் சோர்வை குறைத்து, புத்துணர்ச்சியுடன் நாளை தொடங்கவும் உதவுகிறது. அனைத்துப் பொழுதும் வெந்நீரில் குளிப்பது, குறிப்பாக தலைமுடிக்கே பெரும் சவாலாக இருக்கலாம்.
அதிக வெப்பம், தலைமுடியின் நுண்குழாய்களில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றுகிறது. இதனால் முடி வறண்டுபோய், உடைதலுக்கு காரணமாகிறது. மேலும், உச்சந்தலையில் உலர்ச்சி, அரிப்பு மற்றும் பொடுகு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், முடிக்கு குளிர்ந்த அல்லது சாதாரண வெப்பநிலை நீரை பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.