நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த தொப்புளில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்யும் பழக்கத்தை நாம் மறந்துவிட்டோம். ஆனால், இந்தப் பழக்கம் உடலில் பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஸ்வேதா கூறுகிறார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்கு எந்தெந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.
நல்லெண்ணெய் : நல்லெண்ணெய் பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனைத் தொப்புளில் விட்டு மசாஜ் செய்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு, உடல் சமநிலை பெறும்.
விளக்கெண்ணெய் : விளக்கெண்ணெய் குளிர்ச்சிப் பண்புகள் நிறைந்தது. இரவு தூங்கும் முன் சில துளிகள் விளக்கெண்ணெயைத் தொப்புளில் விட்டு மசாஜ் செய்தால், அது உடல் சூட்டைக் குறைக்கும். மேலும் வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல், அசிடிட்டி மற்றும் வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வாக அமைகிறது.
தேங்காய் எண்ணெய் : வறண்ட சருமப் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இரவு தூங்கும் முன் தொப்புளில் சில துளிகள் தேங்காய் எண்ணெயை விட்டு மசாஜ் செய்யலாம். இது உங்கள் சருமம் வறண்டுபோகாமல் பளபளப்பாக இருக்க உதவும்.
வேப்ப எண்ணெய் : வேப்ப எண்ணெயைத் தொப்புளில் விட்டு மசாஜ் செய்தால், முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கழிவுகள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சி பெறும்.
கடுகு எண்ணெய் : கடுகு எண்ணெய் இயற்கையாகவே வலிகளைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டது. இந்த அடர்த்தியான எண்ணெயை லேசாகச் சூடு செய்து, தொப்புளில் விட்டு மசாஜ் செய்தால் எலும்புகள் வலுப்படும், மூட்டு வலி குறையும்.
பாதாம் எண்ணெய் : பாதாம் எண்ணெயைத் தொப்புளில் மசாஜ் செய்யும்போது, உள்ளுக்குள் இருந்து உங்கள் சருமம் பளபளப்பாக மாறும். இது உடல் முழுவதும் வறட்சி இல்லாமல் இருக்க உதவும்.
எப்படி மசாஜ் செய்ய வேண்டும்..?
நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயை லேசாகச் சூடு செய்து, 3-4 சொட்டுகள் மட்டும் தொப்புளில் விடவும். பின்னர், விரல்களால் வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆறு எண்ணெய்களில் உங்களுக்குத் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்து தினமும் இரவு மசாஜ் செய்து வந்தால், ஆரோக்கியமான பலன்களைப் பெறலாம்.
Read More : உங்களுக்கு சளி, காய்ச்சல் இருக்கா..? வீட்டு வைத்தியம் செய்யப்போறீங்களா..? அப்படினா முதலில் இதை படிங்க..!!



