தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் முறைகளில், பெண்களுக்குரிய கருத்தடை மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பலர் அவற்றை தவிர்க்கின்றனர். எனவே, ஆண்களுக்கான முக்கிய கருத்தடை முறைகளான வாஸெக்டமி மற்றும் ஆணுறை பயன்பாடு முக்கியமானதாகிறது.
இதில், ஆணுறை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிமையான முறையாக கருதப்படுகிறது. இது கர்ப்பத்தை தடுப்பதுடன் மட்டுமல்லாமல், எய்ட்ஸ், சிபிலிஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியாக பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஆணுறை வகைகள் : வெரிவெல் ஹெல்த் இதழின் அறிக்கையின்படி, ஆண்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, ஆணுறைகள் வெவ்வேறு மூலப்பொருட்களிலும் சிறப்பு அம்சங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.
லேடெக்ஸ் ஆணுறைகள் : இவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகையாகும். தாவர செல்களில் இருந்து பெறப்படும் ரப்பர் போன்ற இந்த ஆணுறைகள், கர்ப்பம் மற்றும் STIs இரண்டில் இருந்தும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகின்றன.
பாலிஐசோபிரீன் & பாலியூரிதீன் ஆணுறைகள் : இவை லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஏற்ற, செயற்கையான, லேடெக்ஸ் அல்லாத மாற்றுத் தேர்வுகளாகும்.
ஆட்டு குடல் ஆணுறைகள் : செம்மறி ஆடுகளின் குடலில் இருந்து தயாரிக்கப்படும் இவை, இயற்கையான உணர்வை அளித்தாலும், பாலியல் ரீதியாக பரவும் நோய்களில் இருந்து பாதுகாப்பை வழங்காது என்பது இவற்றின் பெரிய குறைபாடாகும்.
டெக்ச்சர்டு ஆணுறைகள் : உராய்வை அதிகரித்து, உடலுறவின்போது இருவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், இவற்றில் கோடுகள் மற்றும் புள்ளிகள் போன்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
லூப்ரிகேஷன் செய்யப்பட்ட ஆணுறைகள் : இவை உராய்வை குறைத்து, உடைவதற்கான வாய்ப்புகளை தடுக்கும் வகையில், ஒரு திரவத்தால் பூசப்பட்டிருக்கும்.
மெல்லிய ஆணுறைகள் : இவை வழக்கமான ஆணுறைகளைப் போலவே பாதுகாப்பை அளித்தாலும், அதிக உணர்திறன் மற்றும் உணர்வை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
விந்தணு கொல்லி ஆணுறைகள் : இவை விந்தணுக்களை செயலிழக்கச் செய்யும் விந்தணு கொல்லியால் பூசப்பட்டிருக்கும். இருப்பினும், இவை எரிச்சல் அல்லது தொற்று அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் அதிகம் விற்பனையாகும் மற்றும் மிகவும் விரும்பப்படும் ஆணுறை பிராண்ட், பிரிட்டிஷ் நிறுவனமான ரெக்கிட் பென்கிசர் குழுமத்திற்குச் சொந்தமான ‘டியூரெக்ஸ்’ ஆகும். 90 ஆண்டுகளுக்கும் மேலாக ஆணுறை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டியூரெக்ஸுடன், சர்ச் & ட்வைட் கோ, இன்க் மற்றும் கரேக்ஸ் பெர்ஹாட் போன்ற நிறுவனங்களும் உலகளாவிய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Read More : இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனையா..? வீட்டிலேயே தயாரிக்கலாம்..!! சூப்பர் ரிசல்ட்..!!