வீடு என்பது அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால், சில நேரங்களில் காரணமின்றி வீட்டில் சண்டை, டென்ஷன், உடல்நலக் குறைபாடுகள், பொருளாதார பிரச்சனைகள் ஏற்படலாம். இத்தகைய எதிர்மறை நிகழ்வுகளுக்கு வாஸ்து தோஷம் ஒரு காரணமாக இருக்கலாம்.
சரியான திசையில் தூங்குவது, பூஜை அறை, சமையலறை போன்ற பல விஷயங்களில் வாஸ்துவின் பங்கு முக்கியமாக இருக்கிறது. உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளதா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாஸ்து தோஷத்தின் அறிகுறிகள் என்னென்ன..?
குடும்பத்தில் அடிக்கடி சண்டை : வீட்டில் காரணமின்றி சண்டைகள் அதிகரித்தால், அது வாஸ்து தோஷத்தின் நேரடியான அறிகுறியாகும். குறிப்பாக, வரவேற்பறை மற்றும் படுக்கையறையின் திசைகள் குடும்ப உறுப்பினர்களின் உறவுகளை நேரடியாக பாதிக்கும்.
பொருளாதார நெருக்கடி : எவ்வளவு கடினமாக உழைத்தாலும், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டாலோ, பணம் வீணாக செலவானாலோ அல்லது வருமானம் குறைந்தாலோ, அது வாஸ்து தோஷத்தின் அறிகுறியாக இருக்கலாம். சமையலறையின் அமைவிடம் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.
உடல்நல பாதிப்பு : வீட்டில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து தலைவலி, சோர்வு, வயிற்று பிரச்சனைகள் அல்லது தூக்கமின்மை ஏற்பட்டாலோ, அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்தாலோ, வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதை இது உணர்த்துகிறது.
பொருட்கள் அடிக்கடி பழுதடைவது : வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள், குழாய்கள் அல்லது சுவரில் விரிசல்கள் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டால், அது வாஸ்து தொடர்பான சிக்கல்களின் அறிகுறியாகும்.
வேலைகளில் தடை : பூஜை அறை, சமையலறை அல்லது வீட்டின் கதவு போன்ற முக்கிய இடங்கள் வாஸ்துப்படி அமையவில்லை என்றால், வேலை கிடைப்பதில் தாமதம், படிப்பில் கவனம் குறைவது போன்ற தடைகள் ஏற்படலாம்.
அமைதியின்மை : வீட்டில் இருக்கும்போது மனது அமைதி இல்லாமல் இருப்பது, அல்லது பயங்கரமான கனவுகள் வருவது போன்ற உணர்வு இருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிலவுவதை குறிக்கும். படுக்கையறையின் திசை, தூக்கத்தின் தரத்தை வெகுவாக பாதிக்கும்.
இந்த அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருந்தால், வாஸ்து நிபுணர்களின் உதவியை நாடி உரிய மாற்றங்களை செய்வது, வீட்டின் அமைதியையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுக்க உதவும்.
Read More : நடைபயிற்சி செல்லும் முன் என்ன சாப்பிடலாம்..? டைமிங் ரொம்ப முக்கியம்..!! இப்படி நடந்தால் ஆயுள் கூடும்..!!