கால்நடை மருத்துவம் படித்தவரா நீங்கள்..? ஆவின் நிறுவனத்தில் வேலை.. ரூ.43,000 சம்பளம்..!!

job

திருப்பூர் மாவட்டத்தில் ஆவின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கால்நடை சுகாதார பணிகளை வழங்க ஆட்கள் தேவை என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பணியின் விவரங்கள்:

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) – 6

தகுதிகள்:

* கால்நடை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை பட்டப்படிப்பு (B.V.SC & AH) மற்றும் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

* கட்டாயம் கால்நடை மருத்துவத்திற்கான கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

* விண்ணப்பதார்களுக்கு தமிழ் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்.

* கிராமப்புற பகுதிகளில் பால் பண்ணை பணிபுரிந்த அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது.

* அடிப்படை கணினி இயக்கும் திறன் அவசியமாகும்

* 2 அல்லது 4 சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மேலும், அதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: ஆவின் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள கால்நடை ஆலோசகர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.43,000 சம்பளமாக வழங்கப்படும். இதில் சம்பளம் ரூ.30,000, போக்குவரத்து ரூ.8,000 மற்றும் வெரியமில் ரூ.5,000 ஆகியவை அடங்கும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் மூலம் ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர்கள் 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கான விரும்பமுள்ளவர்கள் ஓட்டுநர் உரிமம் உட்பட அனைத்து அசல் சான்றிதழ்களை எடுத்துகொண்டு நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனம்,
ஆவின் பால் குளிரூட்டும் மையம்,
வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு,
திருப்பூர்- 641 605.
இமெயில் : tirupuraavin@gmail.com
தொலைபேசி எண் : 0421 2210150

ஆவின் திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் உள்ள கால்நடை மருத்துவராக பணி செய்ய விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் நேரடியாக சென்று கலந்துகொள்ளலாம்.

Read more: 2014 முதல் 2025 வரை: சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அணிந்த விதவிதமான தலைப்பாகைகள்..! ஒவ்வொரு ஆண்டும் என்ன சிறப்பு..?

English Summary

Are you a veterinary student? Working at Aavin.. Salary Rs.43,000..!!

Next Post

இந்தியாவின் அயன் டோம்? எதிரி தாக்குதல்களை முறியடிக்க புதிய பாதுகாப்பு அமைப்பு.. பிரதமர் மோடி சொன்னதை கவனிச்சீங்களா?

Fri Aug 15 , 2025
இந்தியாவின் பொதுமக்கள் மற்றும் மதத் தலங்களை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அதிநவீன பாதுகாப்பு முயற்சியான மிஷன் சுதர்சன் சக்ரா தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய ஏற்றி வைத்து உரையாற்றினார்.. பிரதமர் சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றுவது இது 12-வது முறையாகும்.. சுதந்திர தின உரையின் போது […]
Pm Modi I Day Speech

You May Like