8ம் வகுப்பு படித்தவரா நீங்கள்?… மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் வேலை! ரூ.50,000 வரை மாத ஊதியம்!…

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.


மயிலாடுதுறை மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 01.01.2023- இன் படி பொதுப்பிரிவினர் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியின பிரிவினர் / ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/ வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, பற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அஞ்சலில் விண்ணப்ப படிவத்தினை அனுப்பவேண்டும். சுய முகவரியுடன் கூடிய ரூ.25/-அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1(104) inches postal cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.05.2023 மாலை 5.45 மணிக்குள் அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

1newsnationuser3

Next Post

கோடை வெயில்!... உடல் சூட்டை தணிக்க புதினா, வெள்ளரி சர்பத்! வீட்டிலேயே தயாரிக்க சூப்பர் ரெசிபி!

Thu Apr 20 , 2023
வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் புதினா, வெள்ளரி சர்பத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து உடல் சூட்டை தணிக்கும் வகையில் மக்கள் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் பானங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டுவருகின்றனர். அந்தவகையில் கோடை வெயிலில் உடலுக்கு […]

You May Like