நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளின் உரிமையை உறுதி செய்யும் முக்கிய ஆவணங்களில், ‘பட்டா’ மற்றும் ‘சிட்டா’ ஆவணங்களுக்கு முக்கியத்துவம். ஆனால், இன்று பலரும் இந்த இரண்டு ஆவணங்களின் இடையே உள்ள வேறுபாடு, அவற்றின் நோக்கம் குறித்து தெளிவாக அறிந்து கொள்வதில்லை. நீங்கள் ஒரு நிலம், வீடு அல்லது மனை வாங்க விரும்பினால், சட்ட ரீதியாக உரிமையை நிரூபிக்க பட்டா மற்றும் சிட்டா ஆகியவை அடிப்படை ஆவணங்கள் ஆகின்றன.
பட்டா என்றால் என்ன? ஒருவரது சொத்துக்கு சட்ட ரீதியான உரிமை இருப்பதை உறுதி செய்யும் முக்கிய ஆவணம் தான் பட்டா. இது வருவாய்த் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ பதிவு ஆவணமாகும். ஒரு நிலம் யாருடையது என்பதை அரசு ரீதியாக சான்று வழங்குவது தான் பட்டா. இந்த ஆவணத்தில், பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம், மற்றும் ஓனரின் பெயர், சர்வே நம்பர், உட்பிரிவு, நன்செய் நிலம் / புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் இப்படி அனைத்து விவரங்களையும் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கும்
பட்டாவில் 2 வகை உண்டு.. ஒன்று கூட்டுப் பட்டா, இன்னொன்று தனிப் பட்டா.. ஒருவர் நிலம் வாங்கினால் அவருக்கு தரப்படுவது தனிப்பட்டா என்பார்கள்.. இதை வைத்து, நிலத்திற்கான சர்வே நம்பர், வாங்குபவர் பெயருக்கு மாற்றம் செய்யப்படும். ஆனால், ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஓனர்கள் இருந்தால், அந்த நிலத்திற்கு கூட்டுப்பட்டாவாக வழங்கப்படும்.
சிட்டா என்றால் என்ன? நிலம் வாங்கும் போது பட்டாவுடன் சேர்ந்து அவசியம் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கிய ஆவணம் தான் சிட்டா. இது உங்கள் நிலம் குறித்த பல முக்கியமான தகவல்களைச் சுட்டிக்காட்டும் ஆவணமாகும். ஒருவருடைய சொத்து எந்த பகுதியில் அமைந்துள்ளது? அதன் அளவுகள் என்னென்ன? அந்த நிலத்துக்கு யார் ஓனர்? அந்த நிலம் நஞ்சையா? புஞ்சையா? வறண்ட நிலமா? ஈர நிலமா? போன்ற விவரங்களை அடங்கிய ஆவணமாகும்..
வருவாய்த்துறை மூலம் இந்த ஆவணம் தரப்படுகிறது. மனையை விற்பவரும் சரி, வாங்குபவரும் சரி, இருவருக்குமே பட்டா சிட்டா மிகவும் தேவை.. நிலம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு இவைகள் மிகவும் அவசியம்.. முக்கியமாக, வீடு கட்டும்போது, இந்த ஆவணத்தை கட்டிடம் கட்டுபவர் வைத்திருக்க வேண்டும்..
கடந்த 2015-ம் ஆண்டு முதல், இந்த 2 ஆவணங்களும் இணைக்கப்பட்டு, பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஒரே ஆவணத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.. இப்படி இணைக்கப்பட்ட பிறகு இதன் பெயர் “பட்டா சிட்டா” என்று அழைக்கப்படுகிறது. அதேபோல, சிட்டா பட்டா சான்றிதழ்களை, ஆன்லைன் மூலமாகவும் பார்த்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பட்டா ஆவணத்தை டவுன்லோடும் செய்துகொள்ளலாம். வருவாய்த் துறையின் கீழ் இந்த சேவை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read more: ட்ரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக ‘ஃபத்வா’ பிறப்பித்த ஈரான் மதகுரு.. அப்படின்னா என்ன?