ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.. இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டியையை ஒட்டி சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்களுக்க மீண்டும் சென்னை திரும்ப 15,129 பேருந்துகள் இயக்கப்படும்..
அக்டோபர் 16 முதல் 19 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. சென்னையில் இருந்து மட்டும் 4 நாட்கள் 14,268 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.. சென்னை கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் பேருந்து முனையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. தீபாவளிக்கு அரசு பேருந்துகளில் சொந்த ஊர் செல்வதற்காக இதுவரை 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்..
கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டில் 2 மையங்களில் முன்பதிவு செய்யப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.. சென்னை தவிர்த்து பிற ஊர்களில் இருந்து 4 நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..” என்று தெரிவித்தார்..
இதனிடையே தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 108 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது.. அதன்படி சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 54 சிறப்பு ரயில்களும், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு 54 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது..
Read More : Breaking : அரசு ஊழியர்களுக்கு ரூ. 16,800 வரை தீபாவளி போனஸ்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்..