திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது..
இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 4-ம் தேதி மாலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.. 10 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில், சுமார் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் மலை மீது ஏற முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்து கோயிலை நொக்கி பாஜகவினர் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. மலையேற அனுமதி கோரிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்..
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.. இந்த மனு விரைவில் விசாரனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை வரவேற்ற எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.. திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ். பாரதி “ இந்த நீதிபதியின் (ஜி.ஆர். சாமிநாதன்) தீர்ப்பை வைத்து ஆட்டம் போடும் எடப்பாடி பழனிசாமியை நான் நேரடியாக ஒரு கேள்வி கேட்கிறேன்.. இதே நீதிபதி தான் கரூர் கோயில் வழக்கில் ஒரு தீர்ப்பு சொன்னார்.. கோயிலில் இருக்கும் பிராமணர்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சிலையில் உருண்டால் தான் நீங்கள் மோட்சத்திற்கு போக முடியும் என்ற தீர்ப்பை சொன்னவர் தான் இந்த நீதிபதி.. கலவரத்திற்கு காரணமான ஒரு தீர்ப்பை வழங்கிய அதே நீதிபதி தான்..
உண்மையாகவே இந்த நீதிபதியின் தீர்ப்பை எடப்பாடி பழனிசாமி மதிப்பதாக இருந்தால், ஹெச். ராஜா சாப்பிட்டு போட்ட எச்சிலையில் எடப்பாடி உருள தயாரா? அவ்வளவு சொரணை, வீரம், முருகன் மீது பாசம் எடப்பாடிக்கு இருந்தால் ஹெச். ராஜா சாப்பிட்டு போட்ட எச்சிலையில் நாளை காலையில் எடப்பாடி பழனிசாமி சட்டையை கழட்டி உருண்டால் அவரை மதிக்க, பாராட்ட நான் தயாராக இருக்கிறேன்..” என்று தெரிவித்தார்..



