நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம், மாலை 4 மணி வரை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மாலை 4 மணி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் 115.6 மில்லிமீட்டர் (மி.மீ) முதல் 204.4 மில்லிமீட்டர் (மி.மீ) மழை பெய்யும். இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கலாம்.
இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Read more: ஜூலை 24, 28 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?