வாட்ஸ் அப்பில் புத்தாண்டு வாழ்த்து செய்தி வருகிறதா..? மக்களே உஷார்..!! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யும் லிங்க் இதுதான்..!!

whatsapp tips

தொழில்நுட்பம் வளர வளர, அதைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் கைவரிசையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் நிலவும் பொதுமக்களின் உற்சாகத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள், தற்போது 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டுப் புதிய வகை டிஜிட்டல் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தற்போது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் Happy_New_Year.apk என்ற பெயரில் பரப்பப்படும் லிங்க்குகள் அல்லது கோப்புகள் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் அல்லது அறிமுகமில்லாத எண்களிடம் இருந்து வரும் இத்தகைய லிங்க்குகளை ஒரு பயனர் தெரியாமல் கிளிக் செய்தாலோ அல்லது தரவிறக்கம் (Download) செய்தாலோ, அவரது செல்போன் அந்த மோசடி கும்பலின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். இதன் மூலம் போனில் உள்ள தனிப்பட்ட புகைப்படங்கள், ரகசியத் தகவல்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் நொடிப் பொழுதில் திருடப்பட வாய்ப்புள்ளது.

அரசு மற்றும் காவல்துறையினர் இது தொடர்பாக தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தாலும், கவர்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் என்ற போர்வையில் வரும் இத்தகைய ‘மால்வேர்’ (Malware) தாக்குதல்கள் நுகர்வோரை எளிதில் ஏமாற்றி விடுகின்றன. எனவே, அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய மெசேஜ்களைத் தவிர்க்குமாறும், தேவையற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பு உங்கள் கைகளிலேயே உள்ளது என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்படுவதே இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி.

Read More : புத்தாண்டு பிறந்ததும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வந்து விழுந்த நல்ல செய்தி..!! பழைய ஓய்வூதியத் திட்டம்..!! ஜன.6இல் வெளியாகிறது அறிவிப்பு…?

CHELLA

Next Post

ஜனவரி 1-ம் தேதி இந்த 5 விஷயங்களை செய்தால்.. ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்..! பண மழை பொழியும்..!

Thu Jan 1 , 2026
2025-க்கு விடை கொடுத்து, நம்பிக்கைகள் நிறைந்த புதிய ஆண்டு 2026-ஐ வரவேற்றுள்ளோம். ஒவ்வொரு புத்தாண்டும் நமது வாழ்வில் புதிய நம்பிக்கைகளையும், புதிய கனவுகளையும், புதிய உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. “இந்த ஆண்டு எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல், நிம்மதியாக இருக்க வேண்டும்” என்று அனைவரும் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட விருப்பங்கள் நிறைவேற வேண்டுமானால், புத்தாண்டு அன்று நாம் செய்யும் சில சிறிய விஷயங்கள் ஆண்டு முழுவதும் பலன் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். […]
box nn

You May Like