நாம் அனைவருமே சிறுவயதில் “பால் குடிக்க வேண்டும், உடலுக்கு வலிமை கிடைக்கும்” என்ற அறிவுரையை கேட்டிருப்போம். அதனால் பலர் விருப்பமில்லாமல் கூட பாலை சாக்லேட் பவுடர் கலந்து பாலை குடித்து வந்தோம். ஆனால் இந்த அறிவுரை இன்றும் பொருந்துமா? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இப்போது உணவு பாதுகாப்பு குறித்து அதிக கவலைகள் நிலவுகின்றன. நாம் அன்றாடம் குடிக்கும் பாலை பற்றியும் கவனமாக சிந்திக்க வேண்டிய நிலை வந்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி, நாட்டில் பயன்படுத்தப்படும் பால் பொருட்களில் 70%-க்கும் மேல் போலியானவை என்றும் அவரை கலப்படம் செய்யப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் அன்றாடம் குடிக்கும் பாலில் பலர் அதில் குளுக்கோஸ், யூரியா மற்றும் ஸ்கிம் மில்க் பவுடர் போன்ற பொருட்களை கலந்து விடுகின்றனர். இப்படி நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நம்பி குடிக்கும் பால் நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிடுகிறது. குறிப்பாக நகரப் பகுதிகளில் வாழும் பலர், பால் வியாபாரிகளிடம் இருந்து நேரடியாக வாங்கும் பாலை புதியது, பசுமை பால் என்ற நம்பிக்கையோடு வாங்குகிறார்கள்.
ஆனால் இந்த நம்பிக்கை பெரும்பாலும் தவறானதுதான். அந்த பால் அதிக அளவிலான மாசுபாட்டிற்கும், கலப்புக்கும் உட்பட்டிருக்கும் அபாயம் உள்ளது. மேலும், இதற்கான தரநிலைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதே கிடையாது. தண்ணீர், வேறு உணவுப்பொருட்கள், ரசாயனப் பொருட்கள் என பல வகையான கலப்புகள் இந்த வகை பாலில் இருந்து உருவாகும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது. இது ஒரு ஆரோக்கிய உணவாகத் தோன்றினாலும், நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இன்றைய சூழலில், பால் கலப்பை நோக்கி நம் கவனத்தை திருப்புவது மட்டுமல்ல, பயமுறுத்தும் தகவல்களால் மன அழுத்தம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பால் மூலம் தான் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும். பொதுவாக, பாலை கொதிக்க வைத்து பயன்படுத்துவது மூலம் பலருக்கும் சுலபமான பாதுகாப்பு முறை என்று தோன்றலாம். ஆனால் இது ஒரு பகுதியளவு மட்டுமே பாதுகாப்பு தரும்.
ஏனென்றால், பாலை கொதிக்க வைக்கும் போது அதிக சூடு காரணமாக நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து போகும். அதேசமயம், முக்கிய ஊட்டச்சத்துகளும் குறைந்து விடுகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு சிறந்த மாற்றுவழி, UHT (Ultra High Temperature) தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படும் பாலைத் தேர்வு செய்வது தான். இது தற்போது கிடைக்கும் பால்களில் பாதுகாப்பானதும், நம்பகமானதுமான ஒரு தேர்வாக கருதப்படுகிறது.
UHT தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது?
இந்த முறையில் பால் 135°C முதல் 150°C வரையிலான உயர் வெப்பநிலையில், முழுமையாக மூடப்பட்ட அமைப்பில் வெறும் சில விநாடிகள் மட்டுமே வெப்பப்படுத்தப்படுகிறது. பின்னர் உடனடியாக இயற்கை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது. இந்த “ஃபிளாஷ் ஹீட்டிங் மற்றும் கூலிங்” செயல்முறை உயிரணுக்களை முழுமையாக நீக்குகிறது. அதே சமயம், ஊட்டச்சத்து இழப்பை மிகக் குறைவாக வைத்திருக்கிறது.
UHT (Ultra High Temperature) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பால், வெப்பத்தை குறைந்த நேரத்தில் மட்டும் பெற்றதால், அதன் இயற்கை ஊட்டச்சத்துகள் சிறந்த அளவில் நிலைத்திருக்கும். இதன் மூலமாக, பாலின் இயற்கையான நிறம், சுவை பாதுகாக்கப்படுகிறது. இது எந்தவிதமான கையாளலும் இல்லாததால் மாசுபடும் அபாயம் இல்லை. மிகவும் சுத்தமாகவும், கையால் தொடப்படாத முறையிலும் தயாரிக்கப்படுகிறது.
Read More : உடலுறவுக்கு முன் இதை குடித்தால் குதிரை பலம் பெறலாம்..!! சோர்வடையவே மாட்டீங்க..!!