தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் பழைய போல் இல்லை… திடீரென பெரிய அளவில் உயர்ந்து வருவதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 100 யூனிட்டுக்கான மானியத்தை அரசு, அதிக யூனிட்டுகள் பயன்படுத்துவோரிடமிருந்து வசூலிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு புதிய துயரம். பணம் செலுத்தப்பட்டதாக மெசேஜ் வருவதாலும், மின்வாரிய கணக்கில் அந்த தொகை சேரவில்லை என்ற புகார்கள் அதிகரித்து வருகின்றன. இரண்டு மாதங்களுக்கு பிறகு “10,000 ரூபாய் பாக்கி”, “15,000 ரூபாய் பாக்கி” என மின்வாரியம் கூறுவதை கேட்டே மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மார்ச் 2025 நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 3.47 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.
இவற்றில் வீட்டு நுகர்வோர் 2.36 கோடி. சுமார் 1 கோடி வீடுகளுக்கு மின் கட்டணம் மிகக்குறைவு. 500 யூனிட்டிற்குள் பயன்படுத்துவோரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிதமான உயர்வை சந்தித்துள்ளனர். ஆனால் 500 யூனிட்டிற்கும் மேலாக பயன்படுத்துவோர், கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். “மின்கட்டணம் அப்படியே டபுள் ஆகிவிட்டது!” என்ற புகார் அதிகரித்து வருகிறது.
வணிகர்களுக்கு இரட்டை சுமை: கடைகள், வணிக ஸ்தாபனங்களுக்கான மின் கட்டணமும் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுகின்றது. ஆனால் வணிக வளர்ச்சி அதே அளவுக்கு இல்லை. குறுகிய முதலீடு வைத்து வணிகம் செய்வோர் மின் விகிதாரத்தால் கடும் நெருக்கடி அனுபவிக்கிறார்கள். அரசு சில ஸ்லாப்களை வைத்திருந்தாலும், “புதிய சுமை தப்பவில்லை” என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துபவர்கள் கவனம்: அண்மையில் பலர் சந்தித்துள்ள மிகப்பெரிய பிரச்சனை ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும்போது Payment Success என்று காட்டினாலும், அந்த தொகை மின்வாரியத்திற்கு சேராமல் போகிறது. அந்த பணம் ஓரிரு நாளில் அவர்களின் வங்கி கணக்கிற்கே திரும்ப வந்திருக்கும். அதனை கவனிக்காத மக்கள் மின்கட்டணம் கட்டிவிட்டதாக நினைத்து ஏமாந்துவிடுவார்கள். இந்த சிக்கல்களை கண்டுபிடிக்க தெரியாத மக்கள் மின்வாரியத்தில் போய் முறையிட்டு அவதிப்படுகிறார்கள்.
எனவே ஆன்லைனில் இபி பில் கட்டி பணம் போய்விட்டது என்பதை உறுதி செய்யுங்கள். அப்படி போகவில்லை என்றால் பணம் உங்களுக்கு ஓரிரு நாளில் வந்துவிடும். சமீப காலங்களில் ஆன்லைனில் இபி பில் கட்டியவர்கள் இந்த சிக்கல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
Read more: கல்லூரி நண்பருடன் செல்ஃபி எடுத்த காதலியை கல்லாலே அடித்துக் கொன்ற காதலன்..!! பகீர் சம்பவம்..



