இரவில் தாமதமாக தூங்குபவரா நீங்கள்..? மாரடைப்பு, பக்கவாதம் வருவது உறுதி..!! புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

heart attack

இன்றைய நவீன உலகில் வேலைப்பளு மற்றும் சமூக வலைதளங்களின் மோகத்தால் பலரும் நள்ளிரவு வரை விழித்திருந்துவிட்டு, அதிகாலையில் தாமதமாக எழுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர். ஆனால், இத்தகைய பழக்கம் உங்கள் உயிருக்கே உலை வைக்கும் ஒரு காரணியாக மாறக்கூடும் என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.


உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணக்கின்படி, ஆண்டுதோறும் சுமார் 2 கோடி மக்கள் இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான மரணங்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தான் முக்கிய காரணமாக அமைகிறது. இந்த வரிசையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வு, நாம் எப்போது தூங்குகிறோம் என்பதும் இதய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க இதய சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், சுமார் 3.2 லட்சம் பேரின் தூக்க முறைகள் கடந்த 14 ஆண்டுகளாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. இதில் அதிகாலையில் எழுபவர்கள் மற்றும் நள்ளிரவு வரை விழித்திருப்பவர்கள் என இரு தரப்பினரையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்தன. அதாவது, இரவு நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு, மற்றவர்களை விட இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் 79 சதவீதம் வரை அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த பாதிப்பிற்கு பின்னால் ஒரு முக்கியமான அறிவியல் காரணம் ஒளிந்துள்ளது. நமது உடலானது இயற்கையான பகல் மற்றும் இரவு சுழற்சிக்கு ஏற்ப இயங்கும் ஒரு உயிரியல் கடிகாரத்தை கொண்டுள்ளது. நாம் இரவு நேரத்தில் நீண்ட நேரம் விழித்திருக்கும்போது, இந்த உயிரியல் கடிகாரம் நிலைதடுமாறுகிறது. இது உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, இரத்த அழுத்த மாறுபாடு மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதனால்தான், இரவு நேரங்களில் ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் நீண்டகாலமாகவே கூறி வருகின்றனர்.

இருப்பினும், இந்த ஆபத்து என்பது வெறும் தூக்க நேரத்தால் மட்டுமே உருவாவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இரவு நேரங்களில் விழித்திருப்பவர்கள் பெரும்பாலும் முறையற்ற உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சியின்மை, புகைப்பிடித்தல் மற்றும் மன அழுத்தம் போன்ற தவறான வாழ்வியல் முறைகளைக் கொண்டுள்ளனர். இவை அனைத்தும் சேர்ந்து இதயத்தின் செயல்பாட்டை மெல்ல மெல்ல முடக்கிவிடுகின்றன.

இந்த ஆபத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிமையான சில மாற்றங்களே. முதலாவதாக, தூங்கும் நேரத்தையும் விழிக்கும் நேரத்தையும் தினமும் ஒரே சீராக வைத்திருக்க பழக வேண்டும். காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தைச் சீரமைக்க உதவும். அத்தோடு இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துச் சீராக வைத்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், உங்கள் இதயத்தின் நலன் உங்கள் கைகளில்தான் உள்ளது; சரியான நேரத்தில் தூங்கிச் சரியான நேரத்தில் எழுவது உங்கள் ஆயுளைக் கூட்டும் ஒரு எளிய மந்திரமாகும்.

Read More : ரூ.200 லட்சம் கோடியை தொட்ட இந்தியாவின் கடன்..!! வட்டி மட்டுமே இவ்வளவா..? பட்ஜெட் சொல்லும் பகீர் தகவல்..!!

CHELLA

Next Post

மே மாதத்திற்குப் பிறகு மோடி பதவி விலகுவாரா? அடுத்த பிரதமர் யார்? ஒரு பிரபல ஜோதிடரின் பரபரப்பான கணிப்பு!

Mon Feb 2 , 2026
நாட்டின் அரசியல் மற்றும் திரைப்படத் துறையில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து ஒரு பிரபல ஜோதிடர் கூறிய கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு முதல் பாலிவுட் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரை, அவர் பத்து முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த விவரங்களை அவர் gyaansutraofficial என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். நரேந்திர மோடி தொடர்ச்சியாக 3 முறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியை […]
pm modi

You May Like