இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான உடல் நல பிரச்சனை என்றால், அது உடல் எடை அதிகரிப்பு தான். இதற்கு வாழ்க்கை முறை, தவறான உணவியல் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் பற்றாக்குறை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இதில் இருந்து விடுபட இயற்கையான, பாரம்பரிய வழிகள் பல இருந்தும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அந்த வகையில், இன்று வெந்தய நீர் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
வெந்தயம் (Fenugreek) என்பது மருத்துவ முறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் மூலிகை. இது சுவையையும், சத்து மதிப்பையும் ஒரே நேரத்தில் தரக்கூடியது. வெந்தயத்தில் உள்ள டயட்டரி ஃபைபர் (dietary fiber), அன்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நாற்பது விதமான ஊட்டச்சத்துக்கள் உடல் நலத்தை மேம்படுத்துவதுடன் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அடுத்த நாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை வடிகட்டி அருந்த வேண்டும். வெந்தய தானியத்தையும் மென்று விழுங்கலாம். இவ்வாறு தினமும் குடிக்கக் குடித்தால், சில வாரங்களில் உங்களால் மாற்றத்தை உணர முடியும்.
வெந்தய நீர் பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதிலுள்ள நார்ச்சத்து, வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கச் செய்கிறது. இதனால் தேவையற்ற உணவை குறைத்து, உடலில் சேரும் கலோரிகள் ஒழுங்குபடுத்துகிறது. மேலும், இது இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க உதவுவதால், சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக, இது எடை அதிகரிப்பை தடுக்கிறது.
வெந்தய நீர் இயற்கையானது என்றாலும், அனைவருக்கும் ஒத்துப்போகாது. சிலருக்கு இது வாயு, மலச்சிக்கல் போன்ற அடிக்கடி பிரச்சனைகள் கொடுக்கும். இதனால் ஆரம்பத்தில் குறைந்த அளவில் துவங்கி, உடல் பழகும் வரை தொடரலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், முக்கிய நோயாளிகள் இதைப் பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
Read More : “எவன் கூட பேசிட்டு இருக்க”..? மணிக்கணக்கில் பேசிய மனைவியை கதிகலங்க வைத்த கணவன்..!!