பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது மத்திய அரசின் எந்த திட்டம் மக்கள் விரோத திட்டம் என்பதை முதல்வர் விளக்க வேண்டும்..” என்று கூறினார்.. பாஜகவிற்கு நீங்கள் தலைவரா அல்லது அண்ணாமலை தலைவரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் “ இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.. நீங்கள் தலைவரா அவர் தலைவரா என்றால் எங்களுக்குள் சண்டை மூட்டுவது உள்ளது.. இந்த மாதிரி கேள்விகளை யாரிடமும் கேட்காதீங்க..” என்று தெரிவித்தார்..
மேலும் “ அண்ணாமலை தினகரன் சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்று தான் சொல்லி இருக்கின்றனர்.. எல்லா தலைவர்களுக்கும் எல்லா கட்சியிலும் நட்பு ரீதியான உறவு இருக்கிறது..” என்று தெரிவித்தார்.
அதிமுகவின் தலைமை அலுவலகம் சென்னையில் தான் உள்ளது. ஆனால் அதை இயக்குபவர்கள் டெல்லியில் இருக்கின்றனர் என்று கனிமொழி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “ கனிமொழிக்கு பாவம்.. சென்னையில் அதிமுக அலுவலகம் இருப்பது தெரியவில்லை..” என்று தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர், பாஜக தலைவர் ஜேபி நட்டா வரும் 6-ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார்..” என்று தெரிவித்தார்..
முன்னதாக சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அண்ணாமலை தினகரனிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிடிவி தினகரனுடன் பேசியது என்ன என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ டிடிவி தினகரன் ஒரு மாதம் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னை வந்த உடன் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.. அதனடிப்படையில் அவரை சந்தித்து பேசினேன்.. அவரை சந்தித்தது உண்மை தான்.. தமிழகத்தில் தற்போது அரசியல் களம் எப்படி உள்ளது என்பது பற்றி பேசினோம்.. திமுக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேசினோம்.. இது ஒரு வெளிப்படையான சந்திப்பு தான்..
எப்போதும் டிடிவி தினகரனும் பாஜகவும் தொடர்ந்து நட்புறவில் தான் உள்ளது.. கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என தினகரனுக்கு அழைப்பு விடுத்தேன்.. நவம்பர் மாததிற்குள் நல்ல முடிவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.. திமுக கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டும் தான் வீழ்த்த முடியும்.. டிடிவி தினகரன் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.. டிடிவி தினகரன் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களை மதிக்கும் நபர் நான்.. அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை.. அதனடிப்படையில் தான் இந்த சந்திப்பு இருந்தது.. அதனால் பொறுத்திருப்போம்..” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது..
Read More : பாஜகவை நம்பி EPS-ஐ பகைத்த செங்கோட்டையன்.. கடைசியில் நட்டாற்றில் விட்டுட்டாங்களே..!! என்னாச்சு..?