சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பன் (65), கடந்த மாதம் 7-ஆம் தேதி தனது மாட்டுக்கொட்டகையில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் மரக்கட்டை அல்லது இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். செல்லப்பனின் மனைவி பெருமாயியிடம் விசாரித்தபோது, செல்லப்பன் அருகில் வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணிடம் பேசுவார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர், சங்கீதாவிடம் விசாரித்தபோது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
சங்கீதாவுக்கும் கந்தம்பட்டியைச் சேர்ந்த ரவுடி பிரபு (32) என்பவருக்கும் 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரம் செல்லப்பனுக்கு தெரியவந்துள்ளது. இதனால், செல்லப்பன் சங்கீதாவிடம், தன்னுடன் பழக வேண்டுமென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனை சங்கீதா பிரபுவிடம் தெரிவித்தபோது, ஆத்திரமடைந்த பிரபு, தனது நண்பர்களான குமரவேல் (எ) பரோட்டா குமார் (22) மற்றும் தினேஷ் (எ) வாலு (20) ஆகியோருடன் சேர்ந்து செல்லப்பனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி, சம்பவத்தன்று இரவு செல்லப்பன் தூங்கிக் கொண்டிருந்தபோது, 3 பேரும் சேர்ந்து அவரை மரக்கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் தான், போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தக் கொலைக்குச் சங்கீதா உடந்தையாக இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : “பூஜா ஹெக்டேவை விட செமயா இருக்கே”..!! கல்லூரி மாணவர்களுடன் மோனிகா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பேராசிரியை..!!