காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிப்பவரா நீங்கள்?. இந்த புற்றுநோயில் இருந்து தப்பிக்கவே முடியாது!. ஆய்வில் அதிர்ச்சி!

morning wake up cigarette 11zon

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் சரி செய்து விடலாம். ஆனால் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் அது உயிருக்கே கூட உலை வைக்கும் அளவிற்கு கொடிய நோயாகும். நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் கேன்சரை உண்டாக்கும் அல்லது கேன்சர் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த பொருட்களில் உள்ள ரசாயனங்கள் அல்லது பண்புகள் புற்றுநோய் வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றன.


கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 18 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் நுரையீரல் புற்றுநோயால் வெகுசிலரே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இரண்டாம் உலகப்போருக்கு பிறகே உலகளவில் இது மிகப்பெரிய நோயாக உருவானதாகவும் கூறப்பட்டுள்ளது.

நுரையீரல் புற்றுநோய் வர புகைப்பிடித்தல், நச்சு வாயுக்களை சுவாசிப்பது, ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறை, உடலுக்கு தேவையில்லாத உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவை முக்கிய காரணிகளாகும். மேலும், குடும்பத்தில் எவருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, COPD போன்ற நுரையீரல் தொற்று இருந்தாலோ இந்த நோய் வர காரணமாக இருக்குமாம். இதனை சைலன்ட் கில்லர் என்றும் மருத்துவர்கள் அழைக்கிறார்கள். ஏனெனில், நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் சில அறிகுறிகள் உள்ளன. அது நோய் முற்றிய பிறகே தெரியவரும்.

தொடர்ந்து காய்ச்சல், இருமும்போது ரத்தம், மூச்சுத் திணறல், மார்பு பகுதியில் அசௌகரியம், திடீர் எடை இழப்பு மற்றும் எலும்பு வலி ஆகியவை நுரையீரல் புற்றுநோயின் சில தவிர்க்க முடியாத அறிகுறிகளாக உள்ளது. ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பற்றி மக்கள் அறிந்திருப்பது முக்கியம்.

முக்கியமாக காலையில் எழுந்ததும் 30 நிமிடங்களுக்குள் சிகரெட் பிடிப்பவர்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கேன்சர் மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள், ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள், நீரிழிவு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது இளைஞர்களை அதிக பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Readmore: தமிழக அரசு சார்பில் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை பயிற்சி…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?

KOKILA

Next Post

இன்று முதல் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி...! மாவட்ட ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு...!

Fri Jul 18 , 2025
தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் – || (தொகுதி || மற்றும் || A பணிகள்) முதல்நிலைத் தேர்விற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் […]
tnpsc group 2

You May Like