விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை நாமக்கல், கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. இதில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. காலை 8.45 மணிக்கு நாமக்கல் வருவார் என்று தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் சென்னையில் இருந்தே 8.45 மணிக்கு தான் கிளம்பினார்.. இதனால் அவர் நாமக்கல் சென்றடையவே மதியம் சுமார் 2.30 மணி ஆனது.. இதை தொடர்ந்து அவர் கரூர் செல்வதற்கு இரவு 7.30 ஆனது.. சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் கால தாமதமாக வந்ததே இந்த கூட்ட நெரிசலுக்கு முதல் காரணம் என்று கூறப்படுகிறது.
கரூரில் விஜய் பேசிவிட்டு கிளம்பிய உடனே பலர் உயிரிழக்க தொடங்கினர்.. பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வந்தது.. விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் போதே 30 பேர் இறந்துவிட்டனர்.. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எந்த பதிலும் கூறாமல் சென்றது ஒட்டுமொத்த மக்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து நேற்று நடிகர் விஜய்யின் பனையூர் வீட்டை முற்றுகையிட தமிழக மாணவர் மன்றத்தில் போராட்டம் நடத்தினர்.. மேலும் சமூக வலைதளங்களில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் “ தமிழக அரசே.. 39 அப்பாவி உயிர்களை பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்ற்வாளி என கைது செய்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : கரூர் சம்பவம் எதிரொலி..!! தலைமறைவான தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!! வலைவீசி தேடும் போலீஸ்..?