Arrest Vijay | விஜய்யை கைது பண்ணுங்க..!! நடிகை ஓவியா போட்ட பரபரப்பு போஸ்ட்..!! அடுத்த நொடியே நடந்த சம்பவம்..!!

Vijay Oviya 2025

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வரும் பிரச்சாரக் கூட்டத் தொடரின் 3ஆம் கட்டம் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்தது. ஆனால், கரூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் பிரச்சாரத்துக்காக தொண்டர்களும் ரசிகர்களும், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும், அதிகாலை முதலே திரண்டு இரவு வரை காத்திருந்தனர்.


விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து வர, வழிநெடுகிலும் திரண்டிருந்த கூட்டம் காரணமாக, 1.5 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே 1.5 மணி நேரம் பிடித்தது. அவர் இரவு 7 மணிக்கு மேலேயே பிரசார இடத்தை வந்தடைந்தார். கட்டுக்கடங்காத கூட்டம், விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் மற்றும் ஏற்கனவே திரண்டிருந்தவர்கள் என ஏற்பட்ட கடும் நெரிசலால் அந்தப் பகுதி கலவர பூமியானது.

இதில், மயக்கமடைந்த 50-க்கும் மேற்பட்டோரை உறவினர்களும் அருகில் இருந்தவர்களும் உடனடியாக தனியாா் மருத்துவமனைகளுக்குக் கதறியழுதவாறு தூக்கிச் சென்றனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து அவர்களைப் போர்க்கால அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றன. அங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 10 குழந்தைகள், 17 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் உட்பட மொத்தம் 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், ‘புஷ்பா-2’ திரைப்பட வெளியீட்டின்போது ஐதராபாத் திரையரங்கில் ஏற்பட்ட நெரிசலில் பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதேபோல, கரூரில் 39 பேர் உயிரிழந்த இந்தச் சோக நிகழ்விலும், ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி “பிரசாரக் கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் கட்சித் தலைவரே பொறுப்பு” என்ற அடிப்படையில், விஜய் உட்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான், கரூர் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் மற்றும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகை ஓவியா, விஜய்யை கைது செய்ய வேண்டும் (Arrest Vijay) என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், விஜய் ரசிகர்கள் இதை கடுமையாக வசைபாடிய நிலையில், அவர் தனது போஸ்டை டெலிட் செய்துள்ளார்.

Read More : Flash | கடும் கோபத்தில் மக்கள்..!! விஜய் சுற்றுப்பயணத்திற்கு அதிரடி தடை..? தவெகவினர் அதிர்ச்சி..!!

CHELLA

Next Post

மீளா துயரத்தில் கரூர்..!! இன்று முழுவதும் கடைகள் அடைப்பு..!! வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு..!!

Sun Sep 28 , 2025
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட மோசமான கூட்ட நெரிசலின் காரணமாக, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 39 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரூர் நகரில் முழுமையான கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது 3ஆம் கட்டப் பிரச்சாரத்தை […]
Karur 2025

You May Like