சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு முழுவதும் பரபரப்பும் மோதல்களும் நிறைந்ததாக அமைந்தது. வீட்டிற்கு வந்த முத்துவிடம் நீ ஏன் அருணுடன் சண்டை போட்ட என்று அண்ணாமலை கேட்க, காரணம் மீனாதான் என்று சொல்கிறார். எல்லாரும் என்னாச்சு என்று கேட்க, கிரிஷை முதலில் பார்க்கும்போது என்னை மாதிரியே இருக்குனு அந்த பையனை தத்தெடுக்கணும்னு சொன்னது மீனாதான்.
ஆனால் இப்போ அவனை தத்தெடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறார். அதனால் தான் அதற்கான காரணத்தை கேட்க சொல்லி நான் சீதாவிடம் சொன்னேன். சீதா அருணிடன் சொல்லி இருக்கிறா. அவன் என்னை அசிங்கப்படுத்தி பேசுறான் என்று வருத்தப்பட்டு கூறுகிறான். இதை கேட்டு உண்மையை சொல்ல முடியாமல் மீனா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள்.
முத்து சொல்வதை கேட்டு நீ ஏன் கிரீஷை தத்தெடுக்க சம்மதிக்க மாட்ற என அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பிக்கின்றனர். அப்போது மீனா, இப்போ எங்களுக்கு குழந்தை இல்லைன்னு கிரீஷை தத்தெடுக்கிறோம். நாளைக்கு எங்களுக்கு குழந்தை பிறந்துட்டால் இதே அன்பை என்னால காட்ட முடியுமா தெரியலை என்கிறாள். இதை கேட்ட விஜயா இந்த விஷயத்துல நீ எடுத்த முடிவுதான் சரி என்கிறான்.
மீனா சொன்னதை கேட்ட அண்ணாமலை மீனா சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு. உனக்கே தெரியும் பாதில அம்மா பாசம் கிடைக்கிறது நின்னுட்டா அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்னு என்று அட்வைஸ் பண்ணுகிறார். அதன்பின்னர் அண்ணாமலை, சீதாக்கிட்ட இந்த பிரச்சனையை பத்தி பேசும்மா என்கிறான்.
அதற்குள் அருண், என் பிரெண்ட் கிட்ட பேசிட்டு இருந்தேன். அப்போது வந்து சம்பந்தமே இல்லாமல் முத்து என்னை அடிச்சுட்டான் என்று வழக்கம்போல நாடகம் ஆடுகிறான். அருண் சட்டை கிழிந்து அடி வாங்கி வந்திருப்பதால் சீதா முத்து மீது செம கோபத்தில் இருக்கிறாள்.
அதன் பின் முத்துவும் மீனாவும் அவரது அம்மா வீட்டுக்கு வர, அந்த சமயம் சீதாவும் அங்கு வருகிறார்கள். முத்து, மீனா சொல்ல வரும் எதையும் சீதா கேட்பதாக இல்லை. என் புருஷனை இவர் அடிச்சுட்டு இருப்பாரு. நாங்க பொறுமையாவே போகனுமா? இனிமேல் இவரோட நான் பேசவே மாட்டேன். நடிச்சு நடிச்சு எல்லாரையும் ஏமாத்துறீங்க என வார்த்தையை விடுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
Read more: தாடி இல்லாத இயேசுவின் அரிய பழங்கால ஓவியம்.. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!



