“அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி..” சீனாவுக்கு இந்தியா பதிலடி..!

india china 01 1764122443 1

இந்தியப் பெண் ஒருவர் ஷாங்காய் விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அருணாச்சல பிரதேச விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இங்கிலாந்தில் வசிக்கும் பென் வங்க்ஜோம் தொங்க்டொக் என்ற இந்திய பெண், நவம்பர் 21 அன்று லண்டனிலிருந்து ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காயில் மூன்று மணி நேர இடைநிறுத்தம் இருந்தது. ஆனால், தனது பாஸ்போர்ட்டில் பிறந்த இடமாக அருணாச்சல் பிரதேசம் குறிப்பிடப்பட்டிருந்ததால், சீன குடிவரவு பணியாளர்கள் தனது பாஸ்போர்ட்டை செல்லாது என்று அறிவித்ததாக அப்பெண் குற்றம்சாட்டினார். இதனால், எளிதான இடைநிறுத்தமாக இருக்க வேண்டிய பயணம், துன்பகரமான அனுபவமாக மாறியது எனவும் அப்பெண் கூறினார். மேலும் அருணாச்சல பிரதேசம் சீனாவின் பகுதி என்று சீன அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்..


இதையடுத்து சீனா இதுகுறித்து நேற்று விளக்கம் அளித்தது.. சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் மாவோ நிங் அந்தப் பெண்ணுக்கு எந்த கட்டாய நடவடிக்கைகளும், காவலில் வைக்கப்படுதலும் அல்லது துன்புறுத்தலும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் “சீனாவின் எல்லைச் சோதனை அதிகாரிகள் முழு செயல்முறையையும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் படி மேற்கொண்டதையும், சம்பந்தப்பட்ட நபரின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை முழுமையாகப் பாதுகாத்ததையும் நாங்கள் அறிந்தோம். சாங்நான் என்பது சீனாவின் நிலப்பரப்பு. இந்தியா சட்டவிரோதமாக அமைத்ததாகக் கூறப்படும் ‘அருணாச்சல் பிரதேசத்தை’ சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை,” என கூறினார்.

இந்த நிலையில் அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு அகற்ற முடியாத மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் உரிமையை நேற்று மீண்டும் சீனா கூறியிருந்த நிலையில் இந்தியா இந்த கருத்தை தெரிவித்துள்ளது..

சீனாவுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் “அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் அகற்ற முடியாத மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும், இது தெளிவாகத் தெரியும் உண்மை. சீனாவின் எந்த மறுப்பும் இந்த உண்மையை மாற்றப் போவதில்லை.” என்று கூறினார்.

மேலும் “சீன அதிகாரிகள் தங்களுடைய நடவடிக்கை குறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை; அந்த நடவடிக்கைகள் சர்வதேச விமானப் பயணத்தை ஒழுங்குபடுத்தும் பல உடன்படிக்கைகளையும் மீறுகின்றன. மேலும், அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் 24 மணி நேரம் வரை விசா இல்லாமல் இடைநிறுத்தப் பயணத்தை அனுமதிக்கும் தங்களது சொந்த விதிகளுக்கும் சீனாவின் நடவடிக்கைகள் முரணாக உள்ளன,” என்றும் அவர் கூறினார்.

அருணாச்சல் பிரதேச முதல்வர் பெய்மா காண்டு, இந்த சம்பவத்தால் “ஆழ்ந்த அதிர்ச்சி” அடைந்ததாகவும், அந்த பெண்மணிக்கு செய்யப்பட்ட “இன அடிப்படையிலான கேலிச்செயல் எனவும், இது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது” என்றும் தெரிவித்தார்.

அருணாச்சல் பிரதேசத்தை சீனா தொடர்ந்து உரிமைக் கோரி வரும் நிலையில், இந்தியா அதனை மறுத்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் இந்தியாவின் அகற்ற முடியாத மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பகுதியே என இந்தியா வலியுறுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில், அந்தப் பிரதேசத்தின் மீது உரிமை கோர சீனா, மாநிலத்திலுள்ள பல நகரங்கள் மற்றும் நிலவடிவ அம்சங்களுக்கு புதிய சீன பெயர்கள் சூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : வீடு வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்..!! மத்திய அரசு கொடுக்கும் 4% வட்டி சலுகை..!! எப்படி பெறுவது..?

RUPA

Next Post

மனைவியின் தலையில் கேஸ் சிலிண்டரை தூக்கிப் போட்டு கொடூரமாக கொன்ற கணவன்..!! நடுங்கிப்போன மகள்..!! நடந்தது என்ன..?

Wed Nov 26 , 2025
கேரள மாநிலம் கொல்லம் கரிக்கோடு பகுதியில், மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவன் தன் மனைவி மீது சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரிக்கோடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் (54) மற்றும் அவரது மனைவி கவிதா (46) ஆகியோருக்கு ஒரு மகள் உள்ளார். மதுசூதனனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் நடந்த முந்தைய […]
Crime 2025 16

You May Like