சென்னையில் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக அமலாக்கத்த்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. சென்னை, காஞ்சிபுரத்தில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,438 கோடி அளவுக்கு ஆரூத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு ஏற்கனவே சோதனை மேற்கொண்டது.. இது தொடர்பாக பாஜக பிரமுகர் ஆர்.கே சுரேஷ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது..
இந்த வழக்கில், காவல்துறையினரால் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் ரொக்கம், நகைகள், கார்கள், அசையா சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர், ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, இதற்காக தமிழக காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மோசடி செய்யப்பட்ட பணத்தை வைத்து சட்டவிரோத பணிப்பரிமாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணையை தொடங்கிய நிலையில் தற்போது ஆருத்ரா கோல்ட் நிறுவனம் தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது..
Read More : மீண்டும் களத்துக்கு வரும் விஜய்.. வரும் 5ம் தேதி ரோடு ஷோ நடத்த திட்டம்..! அனுமதி கேட்டு தவெக மனு..



