ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மானு பாகர் இரண்டு வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. 10 மீ., ஏர் பிஸ்டல் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர், சுருச்சி, பாலக் குலியா இடம் பெற்ற அணி பங்கேற்றது. மொத்தம் 1730 புள்ளி எடுத்து, வெண்கலம் வென்றது. சீனா (1740), தென் கொரிகயா (1731) தங்கம், வெள்ளி வென்றன. அடுத்து தனிநபர் பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில் மனுபாகர் 583 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
ஈஷா சிங் 9 (577), சுருச்சி 10 (574), பாலக் 13வது (573) இடம் பெற்று வெளியேறினர். பைனலில் கடைசி நேரத்தில் சறுக்கிய மனு பாகர், 219.7 புள்ளியுடன் 3வது இடம் பெற, வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆசிய சாம்பியன் ஷிப்பில் மனு பாகர் வென்ற 10வது பதக்கம் இது. சீனாவின் குயான்கேமா (223.1), தென் கொரியாவின் ஜின் யங் (221.3) தங்கம், வெள்ளி வென்றனர். ஜூனியர் பிரிவில் இந்தியாவின் ராஷ்மிகா (ஏர் பிஸ்டல்) தங்கம் வென்றார். அணிகளுக்கான பிரிவில் ராஷ்மிகா, வன்ஷிகா, மோகினி இடம் பெற்ற இந்திய அணி தங்கம் கைப்பற்றியது.