கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் (Tamil Nadu State Apex Cooperative Bank) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள் – 50
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
- பொதுப் பிரிவினர் (UR): 32 வயது
- நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் (PwBD): 42 வயது
- முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): 50 வயது
- ஆதரவற்ற பெண்கள் – உச்ச வயது வரம்பு இல்லை
- SC / ST / MBC / BC / BCM / DNC பிரிவினர்கள் – உச்ச வயது வரம்பு இல்லை
- வயது கணக்கீடு 01.07.2025 தேதியை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம்: உதவியாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.32,020 என்பது அடிப்படை சம்பளமாகும். அந்த வகையில், ரூ.32,020 – 96,210 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) அல்லது பொறியியல் / தொழில்நுட்பம் துறைகளில் இளங்கலை பட்டப்படிப்பு (BE / B.Tech) முடித்திருக்க வேண்டும்.
பொறியியல் / தொழில்நுட்ப துறைகள்
- கணினி அறிவியல் (Computer Science)
- தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
- எலெக்ட்ரிக்கல்
- எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்
- சிவில்
- இதற்கு இணையான பாடத்திட்டங்கள்
பிற துறைகள்
- சட்டம் (Law) – இளங்கலை பட்டம்
- வணிகம் (Commerce) – இளங்கலை பட்டம்
கட்டாய கூடுதல் தகுதிகள்: விண்ணப்பதாரர்கள் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது தற்போது பயிற்சியில் இருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அறிவு (Computer Knowledge) அவசியம்.
யாருக்கெல்லாம் விலக்கு உண்டு?
- பி.ஏ – கூட்டுறவு
- பி.காம் – கூட்டுறவு
- எம்.ஏ – கூட்டுறவு
- எம்.காம் – கூட்டுறவு
- பி.காம் (ஆனர்ஸ்) – கூட்டுறவு
- அங்கீகரிக்கபட்ட கூட்டுறவியல் முதுநிலை பட்டப்படிப்பு
- வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.
- மேலும், விலக்கு கோருபவர்கள், கணக்குப்பதிவியல், வங்கியியல், கூட்டுறவு, தணிக்கை ஆகிய பாடங்களை படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கு இரண்டு கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படும்.
எழுத்துத் தேர்வு
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
தேர்வு வகை: கொள்குறி (Objective Type)
தரம்: பட்டப்படிப்பு (Degree Level)
தேர்வு நேரம்: 3 மணி நேரம்
வினாக்கள்: 200
மதிப்பெண்கள்: 170
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.
நேர்முகத் தேர்வு (Interview)
மதிப்பெண்கள்: 30
மொத்த மதிப்பெண்கள்
எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு = 300 மதிப்பெண்கள்
தேர்வு நடைமுறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்படுவார்கள். இரண்டு கட்டங்களிலும் பெற்ற மொத்த மதிப்பெண்கள் கணக்கில் கொண்டு இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உரிய கல்வித்தகுதியை பெற்றவர்கள் https://tncoopsrb.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025 05.45 மணி வரை.



