இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (SEBI) தனது பிரிவுகளில் உள்ள Grade A (Assistant Manager) அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் வரவேற்கிறது. வங்கி, நிதி மற்றும் சந்தை ஒழுங்குமுறை துறைகளில் பணியாற்ற ஆர்வம் கொண்ட பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணி: Assistant Manager(Officer Grade-A)
பிரிவு: பொது(General) – 56
தகுதி: சட்டம். சிஏ, சிஎப்ஏ, சிஏஐ பட்டம் அல்லது பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: சட்டம் (Legal) – 20
தகுதி: சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Information Technology – 22
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவியல், ஐடி பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Research – 4
தகுதி: பொருளாதாரம், வணிகம், வணிக நிர்வாகம், பொருளாதார அளவியல், அளவீடு பொருளாதாரம், நிதி பொருளாதாரம், கணிதம், வணிக பொருளாதாரம், விவசாய பொருளாதாரம், வணிக பகுப்பாய்வு போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Official Language – 3
தகுதி : ஹிந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுகலை பட்டம் அல்லது சமஸ்கிருதம், பொருளாதாரம், வணிகம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Electrical – 2
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Civil – 3
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 62,500 முதல் 1,26,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்கும் முறை: https://www.sebi.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.11.2025.



