”16 வயதினிலே”..!! பாரதிராஜாவை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்..!!

’16 வயதினிலே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல்நலக்குறைவால் காலமானார்.


கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. இப்படத்தில் இயக்குனராக பாரதிராஜாவை அறிமுகம் செய்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. இவர் கன்னிப்பருவத்திலே, கிழக்கே போகும் ரயில், பொண்ணு புடிச்சிருக்கு, மகாநதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருந்தார். 77 வயதான எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’16 வயதினிலே திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குநராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்’ என பதிவிட்டுள்ளார்.

நடிகை ராதிகா தனது ட்விட்டரில், ‘நான் அறிமுகமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. என்னுடைய திரையுலக பயணத்தில் பெரும்பங்கு வகித்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல் சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

CHELLA

Next Post

’10 கிலோ அரிசி வாங்குற பணம்’..!! விஜய்யை பார்த்து இப்படி சொல்லிட்டாரே..!! ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்..!!

Wed Jul 12 , 2023
விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். ஒரு பக்கம் சினிமாவில் படு பயங்கரமாக செயல்பட்டு வந்தாலும், மற்றொருபுறம் அரசியல் நுழைவிற்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், நேற்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க பனையூர் இல்லத்திற்கு விஜய் சென்றிருந்தார். அந்தப் புகைப்படங்கள் தான் நேற்று இணையம் முழுக்க பரவி வைரலானது. […]
’10 கிலோ அரிசி வாங்குற பணம்’..!! விஜய்யை பார்த்து இப்படி சொல்லிட்டாரே..!! ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்..!!

You May Like