கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம், 12, 19 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த 15-ம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.. அன்றைய தினமும் அவரிடம் சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது..
இந்த நிலையில் சிபிஐ மீண்டும் ஏன் விஜய்யை விசாரனைக்கு அழைத்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.. அதன்படி கரூர் விவகாரத்தில் முக்கிய ஆதாரமான அனைத்து வீடியோக்களையும் அழிக்க விஜய் முயற்சித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தான் கரூர் டிரோன் footage விஜய் கட்சி சார்பாக எடுக்கப்பட்டது. இதை தான் முதலில் விஜய் அழிக்க உத்தரவிட்டதாகவும், ஆனால் இந்த வீடியோவை தான் சிபிஐ தற்போது மீட்டெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. இது போல் மொத்தமாக சுமார் 3 மணி நேரமும், அவர் வண்டியில் இருந்த கேமரா பதிவுகளும் அழிக்க முயற்சி நடந்துள்ளது.
விஜய் கூட்டத்தில் வரும் போதும் மேல் ஏறி நிற்கும் போதும் அவருக்கு கூட்டத்தின் நிலை பற்றி நன்கு தெரிந்துள்ளது என்பதும் தெளிவாகிறது… தனக்கு எதுவும் தெரியாது என விஜய் கூறுவதை சிபிஐ ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
பல ஆதாரங்களை விஜய் தரப்பு மீடியா முதல் யாருக்கும் தராது அழிக்க வேலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தான் விஜய் மீண்டும் சிபிஐ அழைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. மேலும் கரூர் துயர சம்பவத்தன்று எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ காட்சியும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதுதொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்தவே சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியதாம்..
இந்த விசாரணையில் ஜனநாயகன் ஷூட்டிங்கிற்காக கரூர் கூட்டம் பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.. புகைப்பட ஆதாரங்களுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிபிஐ விசாரணையில் நாமக்கல், கரூர், கூட்டம் ஜனநாயகன் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதா? என்று விஜய்யிடம் சிபிஐ கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.. நாமக்கல், கரூர் பிரச்சார கூட்டத்தை சினிமா ஷூட்டிங் கேமரா மூலம் பதிவு செய்தது யார்? நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தது தெரியுமா..? காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் என அறிவித்துவிட்டு 8 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது ஏன்? என சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பிரச்சாரத்தை நிறைவு செய்ததாக விஜய் சிபிஐயிடம் பதிலளித்ததாக கூறப்படுகிறது. மேலும் சிபிஐ அதிகாரிகளின் பல கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்று விஜய் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. கூட்டங்களில் சினிமா ஷூட்டிங் கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட புகைப்படத்தை காட்டி விஜய்யிடம் சிபிஐ விசாரணை செய்ததாகவும் கூறப்படுகிறது.. ஷூட்டிங் கேமராக்களை பயன்படுத்தியது தொடர்பாக ஜனநாயகன் படக்குழுவை விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read More : தொகுதி பங்கீட்டில் இழுபறி.. டெல்லி செல்லும் இபிஎஸ்.. அமித்ஷா உடன் அவசர ஆலோசனை..!



