நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. 3 நாட்களாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

gettyimages 1157433618 640x640 1

சென்னையில் தங்கம் விலை இன்று மாற்றமின்றி ஒரு சவரன், ரூ.74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் ரூ.2000க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது.. ஆனால் இந்த வாரம் மீண்டும் தங்கம் விலை குறைந்தது.. கடந்த 3 நாட்களில் ரூ.1200-க்கு மேல் விலை குறைந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.9,290-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.74,320 விற்பனை செய்யப்படுகிறது..

எனினும் இன்று வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : நாடு முழுவதும் நவம்பர் 1 முதல் 30 வரை… பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு குட் நியூஸ்…!

English Summary

Gold prices in Chennai remained unchanged today, with a sovereign being sold for Rs. 74,320.

RUPA

Next Post

மலைக்க வைக்கும் மணமகள் சந்தை.. பிடித்த மனைவிகளை காசு கொடுத்து வாங்கி கொள்ளலாம்..!! வினோத நடைமுறை எங்கே தெரியுமா..?

Thu Aug 14 , 2025
Bride market where women are sold.. People who practice strange practices.. Do you know where..?
bulgaria bridal market 14 7 21 1

You May Like