ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.11,300க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.164க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,64,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..



