Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. தொடர் சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ. 11,180க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து தங்கம் விலை ரூ.89,440-க்கு விற்பனையாகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.163க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,63,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளதால் நகைப் பிரியர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : ரூ.85,920 சம்பளம்.. டிகிரி போதும்.. பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை வாய்ப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..!!

RUPA

Next Post

வங்கதேசத்தை அச்சுறுத்தும் நோய்!. பலி எண்ணிக்கை 300ஐ நெருங்கியது!. இந்திய மாநிலங்களுக்கு எச்சரிக்கை!.

Wed Nov 5 , 2025
வங்கதேசத்தில் டெங்குவால் 292 பேர் இறந்துள்ளனர். 73,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு வார்டுகள் மற்றும் மருத்துவ குழுக்களை அமைக்குமாறு மருத்துவமனைகளுக்கு சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டும் டெங்கு வைரஸ் வங்கதேசத்தை மீண்டும் ஒரு பேரழிவு தாக்குதலுடன் தாக்கியுள்ளது. நவம்பர் 4, 2025 அன்று, சுகாதாரத் துறை (DGHS) நான்கு புதிய இறப்புகளை உறுதிப்படுத்தியது, மொத்தம் 292 ஆக உயர்ந்தது. தலைநகர் டாக்காவில் நிலைமை மிகவும் மோசமாக […]
bangladesh dengue

You May Like