மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE மார்ச் 3, 2026 அன்று நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தலா ஒரு தேர்வின் தேதியை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
மாற்றப்பட்ட தேர்வு தேதிகள்
10 ஆம் வகுப்பு:
மார்ச் 3, 2026 அன்று நடைபெற இருந்த திபெத்தியன், ஜெர்மன், தேசிய கேடெட் படை (NCC), போடோ, போதி, ஜப்பானியம், பூட்டியா, ஸ்பானிஷ், காஷ்மீரி, மிசோ, பாஹாசா மெலாயு, புத்தக பராமரிப்பு மற்றும் கணக்கியல் (Elements of Book Keeping and Accountancy) தேர்வுகள் அனைத்தும் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும்.
12 ஆம் வகுப்பு:
மார்ச் 3, 2026 அன்று நடைபெற இருந்த Legal Studies தேர்வு, இப்போது ஏப்ரல் 10, 2026 அன்று நடைபெறும்,, எனினும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் மற்ற அனைத்து பாடத் தேர்வுகளும் முன்னதாக வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படியே நடைபெறும் என்றும், இந்த மாற்றம் தவிர வேறு எந்த பாடத் தேர்வுகளும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கான அறிவுறுத்தல்
இந்த தேதி மாற்றம் குறித்த தகவலை பள்ளிகள் உடனடியாக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று CBSE கேட்டுக் கொண்டுள்ளது. புதிய தேதிகள் அடங்கிய திருத்தப்பட்ட கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட்டுகள் (Admit Card) பின்னர் வழங்கப்படும் எனவும் வாரியம் தெரிவித்துள்ளது.
CBSE அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “மற்ற அனைத்து தேர்வு தேதிகளும் மாற்றமின்றி தொடரும். மாணவர்கள் குழப்பமின்றி தேர்வுக்கு தயாராக பள்ளிகள் இந்த தகவலை அனைவருக்கும் பரப்ப வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More : விளைவுகளை சந்திக்க நேரிடும்.. ஆபாச உள்ளடக்கங்கள் குறித்து சமூக ஊடக தளங்களுக்கு அரசு எச்சரிக்கை..



