அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது..
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.. அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த தேர்வு அட்டவணையை வெளியிட்டார்..
தேர்வு அட்டவணை விவரம்:
காலாண்டுத் தேர்வு:
நடைபெறும் தேதி – செப்டம்பர் 18 முதல் 26 வரை
தேர்வுகளுக்குப் பிறகு செப்டம்பர் 27 முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது.
அரையாண்டுத் தேர்வு:
நடைபெறும் தேதி – டிசம்பர் 15 முதல் 23 வரை
தேர்வுகளுக்குப் பிறகு டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை வழங்கப்படும்.
இத்தேர்வு அட்டவணை மூலம் மாணவர்கள் கால அளவில் திட்டமிட்டு தங்களை தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்களும் இந்த அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு பாட திட்டங்களைச் செம்மைப்படுத்த வாய்ப்பு பெறுகின்றனர்.
அதற்குமுன், முழுமையான வருடாந்திர தேர்வு அட்டவணை (Annual Exam Time Table) அக்டோபர் மாதம் வெளியிடப்படும் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : “இப்படியே போனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்…” செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து..