தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் குடும்பத்தினருடன் கொண்டாட செல்வது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தலைமை செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 22,797 சிறப்பு பேருந்துகளை முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்..
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்“ 9-ம் தேதி சென்னையில் இருந்து 3,142 பேருந்துகள் இயக்கப்படும். 10-ம் தேதி அன்று 3,122 பேருந்துகளும், 11-ம் தேதி 2,347 பேருந்துகளும், 12-ம் தேதி 4,292 பேருந்துகளும் இயக்கப்படும். 13-ம் தேதி 4,882 பேருந்துகளும், 14-ம் தேதி 5,012 பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பொங்கல் முடிந்து மீண்டும் சென்னை திரும்ப 15,188 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 16-ம் தேதி 2,867 பேருந்துகளும், 17-ம் தேதி 1,415 பேருந்துகளும் 18-ம் தேதி 3,100 பேருந்துகளும், 19-ம் தேதி 1530 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.. சென்னையை தவிரத்து மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 9820 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.. ஒட்டுமொத்தமாக பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது..” என்று தெரிவித்தார்..
Read More : தமிழ்நாட்டின் இந்த மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்..! எந்தெந்த தேதிகளில்? வந்தது அலர்ட்..!



