முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்..
தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.. அவர் சென்ற போது வெளிநாட்டு பயணங்கள் எப்படி இருந்ததோ அப்படி தான் எனது பயணமும் இருக்கும் என்று நினைக்கிறார்.. ஆனால் நான் கையெழுத்துப் போடும் அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்துள்ளது..” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் முதலீடுகளை ஈர்க்கவா, குடும்ப முதலீடு செய்யவா? வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என 4 முறை வெளிநாடு சென்ற முதலமைச்சர் ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து..
தான் பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற முதலமைச்சர், மற்ற மாநில முதல்வர்களுடன் மிகவும் குறைவான முதலீடுகளையே கொண்டு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. இந்த ஆட்சி இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் 5வது முறையாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் சென்றுள்ளது உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவா அல்லது முதலீடு செய்ய செல்கிறாரா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.. இந்த கேள்விக்கு முதல்வர் பதில் சொல்வாரா?
கடந்த சுற்றுப்பயணத்தில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் இந்த முறையும் வீணடிக்காமல் தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை ஈர்க்க முதலமைசரை வலியுறுத்துகிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : அண்ணாமலை பற்றி விமர்சிக்க வேண்டாம்.. அதிமுகவினருக்கு இபிஎஸ் போட்ட உத்தரவு.. இது தான் காரணமாம்!