நடிகை அதுல்யா ரவி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் மூலம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெள்ளை நிற கட்-அவுட் பேக்லெஸ் உடையில் அவர் வெளியிட்ட இந்த படங்கள், சன்னி லியோனை மிஞ்சும் அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த ஃபோட்டோ ஷூட்டில், அதுல்யா தனது தோள் தெரியும்படி பக்கவாட்டில் போஸ் கொடுத்துள்ளார். கலைந்த கூந்தல், உதட்டை கடித்தபடி அவர் கொடுக்கும் ஏக்கம் நிறைந்த பார்வை, பின்னணியில் உள்ள பழுப்பு நிறம் என அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு ஒரு தனித்துவமான அழகைக் கொடுக்கிறது.
இந்த கிளாமர் புகைப்படங்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ரசிகர்கள் “அழகியின் புதிய அவதாரம் சூப்பர்!” என்று கமெண்டுகளில் பாராட்டி வருகின்றனர்.
காதல் கண்கட்டுதே, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பெரிய அளவிலான பட வாய்ப்புகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் தனது அழகு மற்றும் உடற்தகுதியை வெளிப்படுத்தி, மீண்டும் திரையுலகின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதாக தெரிகிறது.