லண்டனில் உள்ள செயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில், இரு பெண் ஊழியர்கள் 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உதவி மேலாளர் லிண்டி லீ (வயது 44), இறுக்கமான ஆடைகளை அணிந்து, உள்ளாடைகள் அணியாமல் சிறுவனை மயக்க முயன்றதுடன், பலமுறை பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபட்டது தெரியவந்தது.
மற்றொரு பெண் ஊழியரான மோர்கன் குவிக்லி (வயது 29), அந்த சிறுவனுக்குப் போதைப் பொருட்களை வழங்கி, பாலியல் செயல்களில் ஈடுபட தூண்டியுள்ளார். இந்த நிகழ்வுகள் குறித்து சிறுவனின் தாயார் மற்றும் மற்றொரு பெண் ஊழியரும் நேரடியாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றம் உதவி மேலாளர் லிண்டி லீ மற்றும் மோர்கன் குவிக்லி ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. சிறுவனின் மனதையும், மானத்தையும் காயப்படுத்திய லிண்டிக்கு 23 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறுவனுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றத்திற்காக, குவிக்லிக்கு 12 மாத சமூக சேவை, 20 நாட்கள் மறுவாழ்வுப் பயிற்சி மற்றும் 12 மாதங்கள் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More : ஆதார் கட்டணம் உயர்வு..!! அதிர்ச்சியில் மக்கள்..!! இனி எவ்வளவு தெரியுமா..? அக்.1ஆம் தேதி முதல் அமல்..!!